S J Suryah : மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கும் எஸ்.ஜே சூர்யா..படம் ரிலீஸ் எப்போ தெரியுமா

1 year ago 8
ARTICLE AD

எஸ்.ஜே.சூர்யா

இயக்குநராக அறிமுகமாகி தற்போது நடிகராக தமிழ், தெலுங்கு மொழியில் கலக்கி வருகிறார் நடிகர் எஸ்.ஜே சூர்யா. தற்போது தனுஷின் ராயன் , விக்ரம் நடித்து வரும் வீர தீர சூரன் , ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் , நானி நடிக்கும் சர்போதா சனிவாரம் , உள்ளிட்ட படங்களில்  நடித்து வருகிறார். ராயன் திரைப்படம் வரும் ஜூலை 26 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் பல்வேறு நேர்காணல்களில் எஸ்.ஜே . சூர்யா பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகளில் தனது சினிமா வாழ்க்கையைப் பற்றி பல்வேறு தகவல்களை அவர் பகிர்ந்துகொண்டு வருகிறார்.

என்னுடைய பெஸ்ட்டை நான் கொடுக்க வேண்டும்

தொடர்ச்சியாக நிறைய படங்களில் நடித்து வரும் எஸ்.ஜே.சூர்யா ஏதாவது படத்திலோ அல்லது காட்சியிலோ இன்னும் சிறப்பாக நடித்திருக்கலாம் என்று நினைத்தது உண்டா என்கிற கேள்விக்கு எஸ்.ஜே சூர்யா இப்படி கூறியுள்ளார். “ என்னுடைய மைண்டில் எப்போதும் ஒரு விஷயம் இருந்துகொண்டு தான் இருக்கிறது. அதாவது இன்று என் முன்னாள் வைக்கப் பட்டிருக்கும் கேமராவும் இந்த நாளும் மறுபடியும் எனக்கு கிடைக்காது. இன்று போகும் இந்த 24 மணி நேரம் எனக்கு திருப்பி கிடைக்கப் போவதில்லை. அதனால் நான் என்னுடைய சிறந்த நடிப்பை கொடுக்க வேண்டும் . நாம் அறிவாளியா , முட்டாளா , பலசாலியா என்பது நமக்கு தெரியாது, நமக்கு கொடுக்கப் பட்டிருக்கும் அறிவிற்கு அந்த கனத்தில் நம்முடைய பெஸ்ட்டை கொடுத்தால் நாம் நிச்சயம் நூறு மார்க் வாங்குவோம்.” என்று அவர் கூறியுள்ளார்.

மீண்டும் இயக்குநராக அவதாரம் எடுக்கும் எஸ்.ஜே.சூர்யா

வாலி , குஷி , நியு , அன்பே ஆருயிரே , உள்ளிட்ட ஹிட் படங்களை இயக்கிய எஸ்.ஜே சூர்யா கடைசியாக 2015 ஆம் ஆண்டு இசை படத்தை இயக்கினார். தற்போது மீண்டும் படம் இயக்கப் போவதாக நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். ” இப்போது நான் இருக்கும் பிஸியில் என்னுடைய கால்ஷீட் எனக்கே கிடைப்பது கஷ்டமாக இருக்கிறது. ஆனால் கூடிய விரைவில் நான் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டிருக்கிறேன். அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு இந்த படம் திரையரங்கில் வெளியாகும்படி திட்டமிட்டிருக்கிறேன்.” என்று எஸ்.ஜே சூர்யா தெரிவித்துள்ளார்.

Coolie: ரஜினிகாந்த் மகளாக நடிக்க மாட்டேன் என்று சொன்ன சீரியல் நடிகை - ஏன்?

S J Suryah : ஒரே நாளில் வெளியான இரண்டு போஸ்டர்கள்...இரண்டிலும் போலீஸாக நடிக்கும் எஸ்.ஜே. சூர்யா

Read Entire Article