RSA vs NAM: இறுதிவரை த்ரில்... நமீபியாவிடம் தோற்றுப்போன தென்னாப்பிரிக்கா - டி20யில் மாயாஜாலாம்!

2 months ago 6
ARTICLE AD

உலக கிரிக்கெட்டில் ஜாம்பவான் அணியாக உலா வரும் அணிகளில் ஒன்று தென்னாப்பிரிக்கா. சர்வதேச கிரிக்கெட்டில் தங்களுக்கும் ஒரு இடம் வேண்டுமென்று போராடி வரும் அணி நமீபியா.

தென்னாப்பிரிக்கா - நமீபியா:

இந்த சூழலில், தென்னாப்பிரிக்கா அணி நமீபியா அணியுடன் ஒரே ஒரு டி20 போட்டி நிறைந்த தொடரில் பங்கேற்றது. அதாவது, நமீபியா நாட்டில் உள்ள வின்டோக் நகரில் இந்த போட்டி நடந்தது. தென்னாப்பிரிக்க அணியில் ப்ரெட்டோரியஸ், டி காக், ஹென்ட்ரிக்ஸ், ஸ்மித் என பட்டாளமே இருந்தனர்.

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் ஃபெர்ரெய்ரா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். கத்துக்குட்டி அணி என்ற எண்ணத்தில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு நமீபியா கடும் சவால் அளித்தது. நட்சத்திர வீரர் டி காக் 1 ரன்னில் அவுட்டானார்.

பவுலிங் அசத்தல்:

அடுத்து வந்த ஹென்ட்ரிக்ஸ் 7 ரன்னில் அவுட்டாக, மைதானம் பந்துவீச்சிற்கு நன்று ஒத்துழைத்தது. இதனால், ப்ரெட்டோரியஸ் - ஹெர்மன் ஜோடி நிதானமாக ஆடியது. ஓரிரு ரன்களாகவும், ஏதுவான பந்துகளை மட்டுமே பவுண்டரிக்கும் அனுப்பினர். ஹெர்மன் அதிரடிக்கு மாற முயற்சித்தார்.

ஆனால், ட்ரம்ப்ள்மன் பந்தில் அவர் அவுட்டானார். அவர் 18 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 23 ரன்களுக்கு அவுட்டானார். மறுமுனையில் சிறப்பாக ஆடி வந்த ப்ரெட்டோரியசும் 22 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 22 ரன்களில் அவுட்டானார்.

64 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் போன நிலையில், வந்த வேகத்தில் கேப்டன் ஃபெர்ரெய்ரா 4 ரன்னில் அவுட்டாக ஸ்மித் மட்டும் நிதானம் காட்டினார். நமீபியாவின் ட்ரம்ப்ள்மன் - ஸ்கால்ட்ஸ் ஜோடி பந்துவீச்சில் மிரட்டியது. இவர்களுக்கு ஸ்மித்தும் பந்துவீச்சில் ஒத்துழைத்தார். தென்னாப்பிரிக்க அணிக்காக ஸ்மித் மட்டும் 30 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 31 ரன்கள் எடுக்க கடைசியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்களை தென்னாப்பிரிக்கா எடுத்தது.

பொறுப்புடன் ஆடிய நமீபியா:

135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நமீபியா அணிக்கும் தென்னாப்பிரிக்க அணி சவால் அளித்தது. தொடக்க வீரர் ஜேன் 7 ரன்னில் அவுட்டாக, நிதானம் காட்டிய மற்றொரு தொடக்க வீரர் ஸ்டீங்கம்ப் 19 பந்துகளில் 13 ரன்களில் அவுட்டானார். கேப்டன் எராஸ்மஸ் நிதானமாக ஆட ஈடன் 7 ரன்னில் அவுட்டானார்.

கேப்டன் எராஸ்மஸ் 21 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 21 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஸ்மித் 13 ரன்களில் அவுட்டாக. 84 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது நமீபியா. ஜேன் கீரனுடன் க்ரூகர் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுப்புடன் ஆடினர். கீரின் அதிரடி காட்ட மலான் நிதானமாக ஆடினார். இதனால், 100 ரன்களை நமீபியா கடந்தது. சிறப்பாக ஆடி வந்த மலான் 21 பந்துகளில் 1 சிக்ஸருடன் 18 ரன்களில் அவுட்டானார்.

தென்னாப்பிரிக்கா தோல்வி:

பின்னர், ட்ரம்ப்ள்மனை மறுமுனையில் வைத்துக்கொண்டு ஆட்டத்தின் கடைசி பந்தில் நமீபியா வெற்றி பெற்றது. அந்த அணியின் கீரின் 23 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 30 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார், ட்ரம்ப்ள்மன் 8 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால், நமீபியா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் தென்னாப்பிரிக்க அணி முதன்முறையாக நமீபியாவிடம் நேற்று தோல்வியைச் சந்தித்துள்ளது. முழு நேர உறுப்பினராக இல்லாத ஒரு நாட்டிடம் முதல் முறையாக தென்னாப்பிரிக்க அணி தோல்வியைச் சந்தித்துள்ளது. இது தென்னாப்பிரிக்க ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தமட்டில் எப்போது வேண்டுமானால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதற்கு இந்த போட்டியும் ஒரு உதாரணமாக மாறியுள்ளது. நமீபியா நாட்டில் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ள மைதானத்தில் இந்த போட்டி நடந்தது. அந்த நாட்டில் நடத்தப்பட்ட முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி இதுவே ஆகும்.

Read Entire Article