தாலி, வளையல் உள்ளிட்டவற்றை அணியும் பெண்களுக்கு தேர்வு எழுதும் அறைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில், அந்த விதியில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) தெரிவித்துள்ளது. RRB தேர்வுகளின்போது தாலி உள்ளிட்டவற்றை அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. கர்நாடகாவில் பூணூல் சர்ச்சை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தற்போது அந்த தடை திரும்பப் பெறப்பட்டதாக RRB அறிவித்துள்ளது.

தாலி அணிய தடையா?

இந்தியாவில் அதிகம் பேர் வேலை பார்க்கும் அரசுத்துறை நிறுவனமாக இருப்பது இந்தியன் ரயில்வே. 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்தியன் ரயில்வேயில் பணிபுரிந்து வருகின்றனர். ரயில்வேஸில் காலியாக உள்ள இடங்களுக்கு RRB தேர்வுகள் மூலம் ஆட்கள் சேர்க்கப்படுகின்றனர். இந்த நிலையில், RRB தேர்வுகள் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அதில் பெரிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் பூணூல் சர்ச்சை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், விதிகளில் மாற்றம் கொண்டு வந்துள்ளது RRB. சமீபத்தில், பொது நுழைவுத் தேர்வு (CET) எழுது சென்ற மாணவர்களில் சிலர் பூணூல் அணிந்திருந்ததால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த சம்பவம் கர்நாடகம் முழுவதும் பெரும் போராட்டங்களுக்கு வழிவகுத்தது.

இந்த நிலையில், RRB தேர்வுகளின்போது தாலி, வளையல் உள்ளிட்டவற்றை அணிய தடை விதிக்கப்பட்டிருந்த சூழலில், அந்த தடையை திரும்பப் பெறப்பட்டதாக RRB அறிவித்துள்ளது. இதுகுறித்து தென் மேற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில், "மக்களின் மத உணர்வுகள் புண்படுத்தப்படக்கூடாது என்பதற்காக அறிவுறுத்தல்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

பற்றி எரிந்த பூணூல் சர்ச்சை:

மத சின்னங்கள், வளையல்கள், ஆபரணங்கள், தாலி ஆகியவற்றை தேர்வர்கள் அணிந்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், தேர்வுக்கான அழைப்புக் கடிதத்தில் அதற்கான முன் அனுமதியை பெற்றிருக்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு அறைக்கு தாலி அணிந்து செல்ல விதிக்கப்பட்ட தடைக்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள நாட்டில் இதுபோன்ற 'இந்து எதிர்ப்பு' நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தேர்வர்கள் தங்கள் மதச் சின்னங்களுடன் தேர்வு எழுத அனுமதிக்குமாறு அதிகாரிகளிடம் விஷ்வ இந்து பரிஷத் தலைவர் ஷரன் பம்ப்வெல் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த விவகாரம் குறித்து ரயில்வே துறை இணை அமைச்சர் வி. சோமன்னா, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கவனத்திற்கு எடுத்து சென்றார்.

ರೈಲ್ವೆ ಇಲಾಖೆಯ ಪರೀಕ್ಷೆಗಳಲ್ಲಿ ಅಭ್ಯರ್ಥಿಗಳು ಜನಿವಾರ, ಮಾಂಗಲ್ಯ ಸೂತ್ರ ತೆಗೆದಿಟ್ಟು ಪರೀಕ್ಷೆ ಬರೆಯಬೇಕೆಂಬ ನಿಯಮವಿರುವುದರ ಕುರಿತು ಸಂಸದರು, ಶಾಸಕರು, ಅಖಿಲ ಕರ್ನಾಟಕ ಬ್ರಾಹ್ಮಣ ಮಹಾಸಭಾ ಮತ್ತು ವಿವಿಧ ಸಂಘಟನೆಗಳು ನನ್ನ ಗಮನಕ್ಕೆ ತಂದಿದ್ದರು.

ಈ ಬಗ್ಗೆ ನನಗೆ ತಿಳಿದ ತಕ್ಷಣವೇ ಕೇಂದ್ರ ರೈಲ್ವೆ ಮಂತ್ರಿಗಳಾದ ಶ್ರೀ ಅಶ್ವಿನಿ ವೈಷ್ಣವ್… pic.twitter.com/f55btquEYB

— V. Somanna (@VSOMANNA_BJP) April 28, 2025

பின்னர்தான், விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுகுறித்து எக்ஸ் தளத்தில் சோமன்னா குறிப்பிடுகையில், "தேர்வு எழுதும் போது, பூணூல், தாலி போன்ற தங்கள் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் சின்னங்களை அணிந்திருக்கும் தேர்வர்களுக்கு எந்த இடையூறும் அல்லது பிரச்சனையும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. பரிந்துரைக்கப்பட்ட அனைத்து தேர்வு விதிகள் மற்றும் விதிமுறைகளையும் பின்பற்றும் பட்சத்தில், தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்" என பதிவிட்டுள்ளார்.