Royal Enfield Meteor 350: தம்பி நீ கிளம்பு..! மீடியர் 350-க்கு பட்ஜெட் இல்லையா - சேம் சேம் ஆக கிடைக்கும் 5 பைக் மாடல்கள்

1 month ago 5
ARTICLE AD

Royal Enfield Meteor 350 Rivals: ராயல் என்ஃபீல்ட் மீடியோர் 350 வாங்க விரும்புவோர், அதற்கு முன்பாக பரிசீலிக்க வேண்டிய 5 மாடல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

ராயல் என்ஃபீல்ட் மீடியோர் 350 போட்டியாளர்கள்:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கிடைக்கும் ராயல் என்ஃபீல்டின் மீடியோர் 350 மோட்டார் சைக்கிளானது, ரெட்ரோ ஸ்டைல் க்ரூசர் மாடலாகும். 5 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் இந்த பைக்கின் விலையானது, ரூ.1.95 லட்சத்தில் தொடங்கி ரூ.2.18 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்) வரை நீள்கிறது. 349.34 J சீரிஸ் இன்ஜினை கொண்டு, 20.2 bhp மற்றும் 27 Nm ஆற்றலை உற்பத்தி செய்கிறது. நிஜ உலக பயன்பாட்டில் லிட்டருக்கு 31 முதல் 35 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகிறது. அதேநேரம், இதற்கு போட்டியாகவே பல முன்னறி நிறுவனங்கள் செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மைக்கு பெயர்போன வலுவான சில மாடல்களை உள்ளூர் சந்தையில் கொண்டுள்ளன.

அந்த பட்டியலில் ஹோண்டா ஹார்னெஸ் CB350, யெஸ்டி ரோட்ஸர், ஜாவா 42 FJ, ஹார்லி டேவிட்சன் X440T மற்றும் பஜாஜ் அவெஞ்சர் க்ரூஸ் 220 ஆகிய மாடல்கள் அடங்கும். இந்த போட்டியாளர்கள் ராயல் என்ஃபீல்ட் மீடியோர் 350 மாடலுக்கு இணையான செயல்திறன், அம்சங்கள் மற்றும் க்ளாசிக் ஸ்டைலிங்கையும் கொண்டுள்ளன. சில மாடல்கள் சற்றே குறைந்த விலையிலும் கிடைக்கின்றன. எனவே, மீடியோர் 350 மாடலை தேர்வு செய்வதற்கு முன்பாக பரிசீலிக்க வேண்டிய மாடல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

மீடியோர் 350 மாடலுக்கு டஃப் கொடுக்கும் மாடல்கள்:

1. பஜாஜ் அவெஞ்சர் க்ரூஸ் 220

பஜாஜ் நிறுவனத்தின் அவெஞ்சர் க்ரூஸ் 220 மாடலின் தொடக்க விலையானது ரூ.1.25 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 220சிசி ஆயில் கூல்ட்  சிங்கிள் சிலிண்டர் இன்ஜினை கொண்டு, 18.77 bhp மற்றும் 17.55 Nm ஆற்றலை உற்பத்தி செய்கிறது. 13 லிட்டர் கொள்ளளவிற்கான எரிபொருள் டேங்கை கொண்டிருப்பதோடு, 3.8 லிட்டர் ரிசர்வ் கெபாசிட்டியையும் பெற்றுள்ளது. நிஜ உலகில் லிட்டருக்கு 35 முதல் 40 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகிறதாம். மலிவான விலை மற்றும் எளிய அணுகல் மூலமாக அவெஞ்சர் க்ரூஸ் 220 மாடலானது மீடியோர் 350-க்கு சரியான போட்டியாளராக திகழ்கிறது. குறைந்த எடை (163 Vs 191) மூலம் கூடுதல் மைலேஜ் தருகிறது.

2. ஹோண்டா ஹார்னெஸ் CB350

ஹோண்டா ஹார்னெஸ்  CB350 பைக் மாடலின் விலையானது ரூ.1.93 லட்சத்தில் தொடங்கி ரூ.2.16 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்) வரை நீள்கிறது. 348.36 சிசி ஏர் கூல்ட் இன்ஜின்  மூலம், 20.78 bhp மற்றும் 30 Nm ஆற்றலை உற்பத்தி செய்கிறது. நிஜ உலகில் லிட்டருக்கு 35 முதல் 40 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகிறதாம். அதாவது மீடியோர் 350 மாடலை காட்டிலும் மலிவு விலையில் கிடைப்பதோடு, அதிகப்படியான ஆற்றல் மற்றும் மைலேஜ் மூலம் ஹார்னெஸ்  CB350 கவனத்தை ஈர்க்கிறது. 5 ஸ்பீட் கியர்பாக்ஸை கொண்டுள்ளதோடு, 15 லிட்டர் கொள்ளளவிற்கான எரிபொருள் டேங்கையும் பெற்றுள்ளது.

3. ஜாவா 42 FJ

மீடியோர் 350 மாடலுக்கான மாற்று மோட்டர் சைக்கிள் பட்டியலில் அடுத்ததாக இடம்பெற்று இருப்பது ஜாவா 42 FJ மாடலாகும். இதன் எக்ஸ் ஷோரூம் விலையானது ரூ.1.93 லட்சத்தில் தொடங்கி ரூ.2.07 லட்சம் வரை நீள்கிறது. 334 சிசி இன்ஜினை கொண்டு மீடியோர் 350 மாடலை காட்டிலும் மேம்பட்டு, 28.60 bhp மற்றும் 29.62 Nm ஆற்றலை உற்பத்தி செய்கிறது. 12 லிட்டர் கொள்ளளவை கொண்டு லிட்டருக்கு 32 கிலோ மீட்டர் தூரம் வரை மைலேஜ் வழங்குகிறது. 6 ஸ்பீட் கியர்பாக்ஸ் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. அதிக செயல்திறன், கூடுதல் மாடர்ன் & ஸ்போர்டியர் லுக் உள்ளிட்டவை மூலம் ஜாவா 42 FJ மீடியோர் 350 மாடலுக்கு போட்டி அளிகிறது.

4. யெஸ்டி ரோட்ஸ்டர்

யெஸ்டி ரோட்ஸ்டர் மாடலின் தொடக்க விலையானது ரூ.1.97 லட்சத்தில் தொடங்கி ரூ.2.11 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்) வரை நீள்கிறது. 334 சிசி லிக்விட் கூல்ட் சிங்கிள் சிலிண்டர் இன்ஜினை கொண்டு, 28.77 bhp மற்றும் 29.63 Nm ஆற்றலை உற்பத்தி செய்கிறது. போல்ட் லைன்கள், கவர்ச்சிகரமான கிராபிக்ஸ் ஆகியவை யெஸ்டி ரோட்ஸ்டர் மாடலை தனித்துவமாக மாற்றுகிறது. லிட்டருக்கு 28 முதல் 29 கிலோ மீட்டர் மைலேஜ் அளிப்பதாக பயனர்கள் தெரிவிக்கின்றனர். 6 ஸ்பீட் கியர்பாக்ஸ் உடன் அதிகப்படியான வேகம் மற்றும் மாடர்ன் லுக், ஸ்போர்டி க்ரூசர் தோற்றம் ஆகியவற்றின் மூலம் மீடியோர் 350-க்கு சிறந்த மாற்றாக யெஸ்டி ரோட்ஸ்டர் விளங்குகிறது.

5. ஹார்லி டேவிட்சன் X440T

இந்த பட்டியலில் கடைசியாக இடம்பெற்றுள்ள ஹார்லி டேவிட்சன் X440T, ரூ.2.80 (எக்ஸ் - ஷோரூம்) என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பட்டியலில் மீடியோர் 350 மாடலை காட்டிலும் அதிக விலை கொண்ட வாகனம் இதுவாகும். தினசரி பயன்பாட்டிற்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட்ட இந்த மோட்டார் சைக்கிளானது, 440 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்ட்  இன்ஜினை கொண்டுள்ளது. 27 bhp மற்றும் 38 Nm ஆற்றலை உற்பத்தி செய்து, லிட்டருக்கு 30 முதல் 35 லிட்டர் மைலேஜ் தருவதாக பயனர்கள் தெரிவிக்கின்றனர். அதிகப்படியான செயல்திறன், ப்ரீமியம் மாற்று மோட்டார் சைக்கிளாக ஹார்லி டேவிட்சன் X440T சந்தையில் கிடைக்கிறது.

Read Entire Article