Rohit -Kohli: என் கேரியரை எவன்டா முடிப்பான்.. பேட்டால் அடிச்சு சொன்ன ரோகித் - கோலி!

1 month ago 3
ARTICLE AD

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் ஆடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று நிறைவடைந்துள்ளது. முதல் இரு போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையிங்,  3வது போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

தொடர் விமர்சனங்கள்:

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த தொடர் மீது ரசிகர்கள் ஆர்வம் கொண்டனர். அதற்கு காரணம் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவரும் ஆவார்கள். ஆனால், முதல் போட்டியில் இருவரும் சொதப்பிய நிலையில், இரண்டாவது போட்டியில் ரோகித்சர்மா அரைசதம் விளாசினார். ஆனால், விராட் கோலி டக் அவுட்டானார்.

இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பு விராட் கோலி மற்றும் ரோகித்சர்மா இருவரும் இந்த தொடருடன் ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியானது. அணியின் தோல்வி, இருவரும் அணியின் வெற்றிக்கு முதல் இரு போட்டியில் பங்களிக்காதது இந்த கேள்வியை வலுவாக்கியது. இவர்கள் 2027 உலகக்கோப்பையில் ஆட வேண்டும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்த நிலையில், இவர்கள் இருவரும் 2027 உலகக்கோப்பையில் விளையாட ஆர்வம் காட்டவில்லை என்ற அஜித் அகர்கர் கூறியிருந்ததும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அசத்திய ரோ-கோ:

பிசிசிஐ விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவிற்கு எதிராக இருப்பது போன்ற சூழல் இருந்த நிலையில், விராட் கோலி 2 போட்டியிலும் சொதப்ப, ரோகித்தும் அணியை வெற்றி பெற வைக்க முடியாத நிலையில் இன்று இருவருக்கும் முக்கியமான போட்டியாக இந்த சிட்னி போட்டி இருந்தது.

முதல் இரு போட்டியில் இலக்கை நிர்ணயித்த இந்தியா இன்று இலக்கை நோக்கி களமிறங்கியது. இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் கில் 24 ரன்களில் அவுட்டாக, ரோகித் சர்மா - விராட் கோலி ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்தனர். முதல் இரு போட்டியில் டக் அவுட்டான கோலி இன்று ஒரு ரன் எடுக்கவும் உற்சாகம் அடைந்தார்.

அதன்பின்பு, தங்களின் அனுபவம் மற்றும் திறமையை களத்தில் காட்டினர். ஸ்டார்க் - ஹேசில்வுட் என அனுபவசாலிகளின் பந்துவீச்சை திறம்பட சமாளித்ததுடன் நாதன் எல்லீஸ், கன்னுல்லி, ஜம்பா பந்துவீச்சை அலட்சியமாக எதிர்கொண்டனர்.

ரோகித் சதம் - கோலி அரைசதம்:

விராட் கோலி நிதானமாக ஆட அரைசதம் கடந்த ரோகித் சர்மா அதிரடியாக ஆடினார். பவுண்டரி, சிக்ஸர் என விளாசினார். விராட் கோலி ஏதுவான பந்துகளை மட்டும் பவுண்டரிக்கு அனுப்பினார். இதனால், ஆட்டம் முழுக்க முழுக்க இந்திய அணியின் கட்டுப்பாட்டின் உள்ளேயே ஆட்டம் இருந்தது.

பொறுப்பாக ஆடிய விராட் கோலியும் அரைசதம் விளாச மறுமுனையில் ரோகித் சர்மா சதம் விளாசினார். ரோகித் சர்மா - விராட் கோலி இணை இந்திய அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தது. இந்த வெற்றி மூலம் இந்திய அணி தொடரை முழுமையாக இழப்பது தடுக்கப்பட்டது. இதைக்காட்டிலும் விராட் கோலி - ரோகித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் மற்றும் அணியின் அவர்கள் இடம் மீதான கேள்விக்கு பதில் அளித்தது.

இந்த போட்டியில் ஆட்டமிழக்கால் 74 ரன்கள் எடுத்த விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த சங்ககராவை பின்னுக்குத் தள்ளி 2வது இடத்திற்கு முன்னேறினார். இந்த தொடரை இந்திய அணி இழந்தாலும், கடைசி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக, ரோகித் சர்மா - விராட் கோலி ஆட்டத்தை முடித்துக் கொடுத்தது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.  ரோகித் சர்மா தனது 23வது சதத்தையும், விராட் கோலி தன்னுடைய 75வது அரைசதத்தையும் விளாசினார்.

Read Entire Article