டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்ற தருணத்தில் கூகுள் டிரண்டிங்கில் டாப்பில் டொனால்டு டிரம்ப் மற்றும் கமலா ஹாரீசைவிட ராபர்ட் எஃப் கென்னடி டிரண்டாகி வருகிறார். யார் இவர், எதற்காக டிரண்டாகி வருகிறார் என்பது குறித்து பார்ப்போம்.

அமெரிக்க தேர்தல் முடிவுகள்:

அமெரிக்க அதிபர் தேர்தலில் யானை சின்னம் கொண்ட குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் போட்டியிட்டிருந்த நிலையில், கழுதை சின்னம் கொண்ட ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரீஸ் போட்டியிட்டிருந்தார்.

அமெரிக்க அதிபருக்கான தேர்தலில், நேற்றைய தினம் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையானது தொடங்கியது.

இந்நிலையில், இன்றைய தினம் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், ஆரம்பம் முதலே டிரம்ப்பின் கை ஓங்கியே இருந்தது. இந்நிலையில் மொத்தம் உள்ள 538 இடங்களில் 270 எடுத்தால் வெற்றி என்ற நிலையில் , தற்போதைய நிலவரப்படி 277 இடங்களில் முன்னிலை பெற்று டொனால்டு டிரம்ப் வெற்றி வாகை சூடியுள்ளார். கமலா ஹாரீஸ் 224 இடங்களில் முன்னிலையில் உள்ளார்.

டிரம்ப் வெற்றி:

குறிப்பாக, ஸ்விங்க் மாநிலங்களான அரிசோனா, மிச்சிகன், நவேடா, பென்சில்வேனியா, விஸ்கான்சின், வட கரோலினா, ஜார்ஜியா ஆகிய 7 மாநிலங்கள் தீர்மானிக்கும் மாநிலங்களாக பார்க்கப்பட்டது. இந்நிலையில், தற்போது இந்த 7 மாநிலங்களிலுமே டிரம்ப்பே முன்னிலையில் வகித்து வருவதை பார்க்க முடிகிறது.

இந்த தருணத்தில், வெற்றி களிப்பில், டொனால்டு டிரம்ப் உரையாற்றுகையில், தனது ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதையடுத்து, நாட்டின் எதிர்காலம் குறித்து, தனது பார்வையைப் பகிர்ந்து கொண்டார். அப்போது, அவரது ஆதரவாளர்கள் அவருக்கு உற்சாகமாக கோஷத்தை எழுப்பினர்.

யார் இந்த ராபர்ட் கென்னடி:

இந்நிலையில் ராபர்ட் கென்னடி டிரெண்டாகி வருவது குறித்து பார்ப்போம். ராபர்ட் எஃப் கென்னடி , முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடியின் மருமகனாவார். இவர் சுற்றுச்சூழல், பொது சுகாதாரம் , இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் ஈடுப்பட்டு வருகிறார்.இவர் தற்போது டிரம்பின் ஆதரவாளராக மாறியுள்ளார்.

தேர்தலுக்கு முன்பு ஒரு ட்விட் பதிவில் ராபர்ட் தெரிவித்ததாவது ,

டிரம்ப் வெற்றி பெற்றால், 1940 களில் இருந்து பொது நீர் விநியோகத்தில் சேர்க்கப்பட்டு வரும் ஃபுளூரைடை அகற்றுமாறு நாடு முழுவதும் உள்ள அனைத்து நீர் அமைப்புகளையும் வெள்ளை மாளிகை உத்தரவிடும் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து, தேர்தலுக்கு முன்பு ராபர்ட் குறித்து டிரம்ப் பேசியிருந்ததாவது , “ ராபர்ட் சிறந்த மனிதர், அமெரிக்காவை மீண்டும் ஆரோக்கியமாக்க உதவப் போகிறார், உண்மையில் நல்ல விஷயங்களைச் செய்ய விரும்புகிறார், அதைச் செய்ய நாங்கள் அவரை அனுமதிக்கப் போகிறோம் என டிரம்ப் தெரிவித்திருந்தார்.

இப்போது அமெரிக்கத் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ள நிலையில், கென்னடியின் தண்ணீரில் இருந்து ஃபுளூரைடை அகற்றுவதற்கான திட்டம் மீண்டும் வைரலாகியுள்ளது. மேலும், தீவிர டிரம்ப் ஆதரவாளராக, கென்னடி டிரம்ப் நிர்வாகத்தில் பெரும் பங்கு வகிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபுளூரைடு என்பது வாதம், எலும்பு முறிவுகள், எலும்பு புற்றுநோய், IQ இழப்பு, நரம்பியல் வளர்ச்சிக் கோளாறுகள் மற்றும் தைராய்டு நோய் ஆகியவற்றுடன் தொடர்புடைய எனவும் கூறப்படுகிறது.