தமிழகத்தில் கோடியில் கொட்டும் டாஸ்மாக் வருவாய்

நாளுக்கு நாள் மதுபான விற்பனையானது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தினந்தோறும் டாஸ்மாக் மூலம் அரசுக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டப்பட்டு வருகிறது. அதுவே பொங்கல், தீபாவளி, புத்தாண்டு என்றால் இரண்டு மடங்காக வசூல் அதிகரிக்கும். இது ஒருபக்கம் அரசு வருவாய் கிடைத்தாலும் மதுக்குடிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் பள்ளிக்கூட மாணவர்கள் கூட பாதிக்கப்படும் நிலையானது ஏற்பட்டது. இதனையடுத்து டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என சமூக ஆர்வலர்களால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் புதிதாக பதவியேற்றுள்ள தவெக அரசு முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள 717 டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவிட்டது.

கட்சி நிதி- அரசுக்கு மாற்றம்

அதன் படி வழிபாட்டு தலங்கள், பேருந்து நிலையங்கள், கல்வி நிலையங்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. இதன் அடுத்தக்கட்டமாக ஹாட் பெட்டிகளுக்கு தலா 90 ரூபாயும், பீர் பெட்டிகளுக்கு 40 ரூபாயும், ஒயின் பெட்டிகளுக்கு 20 ரூபாயும் வசூலிக்கப்பட்ட கட்டணம் அரசுக்கு வராமல் கட்சி நிதியாக வசூலிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அந்தத் தொகை முழுவதும் தற்போது நேரடியாக அரசிற்கு வருவாய் வரும் வகையில் ஏற்பாடு செய்து மாற்றம் செய்யப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாடு அரசிற்கு வருடத்திற்கு 1200 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் வரும் வகையில் புதிய அரசு மாற்றம் செய்யப்பட்டது.

கிளப்களில் முறைகேடாக மதுபானம் விற்பனை

இந்த நிலையில், தமிழகத்தில் கிளப்களில் முறைகேடாக மது விற்பனை மூலம் தனியாருக்கு செல்லும் பணத்தை அரசு கஜனாவுகு திருப்ப மதுக்கூட சிறப்புரிமை கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் தமிழகத்தில் டாஸ்மாக கடைகள் மூலம் மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது மட்டுமில்லாமல் எப்எல் 2 எனப்படும் மனமகிழ் மன்றங்களிலும் மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் அந்த அந்த கிளப்களில் உள்ள உறுப்பினர்களுக்கு மட்டும் மது வகைகள் விற்பனை செய்ய வேண்டும் ஆனால் டாஸ்மாக் கடைகள் போல் உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கும் மதுவகைகள் விற்பனை செய்யப்பட்டது. இந்த முறைகேட்டை தடுக்கும் வகையில், கிளப்புகளில் மதுக்கூடங்களில் நடத்த ஆண்டு தோறும் செலுத்தப்படும் சிறப்புரிமை கட்டணத்தை இரண்டு மடங்காக உயர்த்தி அரசிதழ் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

மனமகிழ் மன்றம் தொடங்க கட்டணம் உயர்வு

இதன் படி, தமிழகத்தில் மனமகிழ் மன்றங்கள் தொடங்க சிறப்புக் கட்டணமாக 15 லட்சம் ரூபாய் இருந்த நிலையில் தற்போது அதனை 30 லட்சமாக உயர்த்தி அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் கிளப்களுக்கு அனுமதி பெற 30 லட்சம் ரூபாயாகவும், 10 லட்சத்திற்கும் மேல் உள்ள மாநகராட்சி பகுதிகளில் மன மகிழ் மன்றம் அனுமதிக்கு 25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் 10 லட்சத்திற்கும் குறைவாக உள்ள மாநகராட்சி பகுதிக்கு 20 லட்சமாகவும், நகராட்சி பகுதிகளில் 15 லட்சமாகவும், மற்ற பகுதிகளுக்கு 10 லட்சமாகவும் அனுமதி கட்டணத்தை நிர்ணயித்து அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது.