இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today December 11, 2024:

அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்....

மேஷ ராசி

உடன் பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். புதிய தொழில்நுட்பக் கருவிகள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான பயணங்களில் அனுபவம் ஏற்படும். தந்தை வழி உறவினர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மாற்றமான அணுகுமுறைகள் மூலம் சூழ்நிலைகளை கையாளுவீர்கள். சுபகாரியம் தொடர்பான முடிவுகளில் விவேகம் வேண்டும். ஊக்கம் நிறைந்த நாள்.

ரிஷப ராசி

மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வீட்டில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்லவும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணம் கைகூடும். நண்பர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். புதிய முயற்சிகளுக்கு மாறுபட்ட முறையில் வியூகங்களை அமைப்பீர்கள். இணையம் தொடர்பான பணிகளில் ஆதாயம் அடைவீர்கள். அமைதி நிறைந்த நாள்.

மிதுன ராசி

உத்தியோக பணியில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். உறவினர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். சொத்துப் பிரச்சனைகளில் தெளிவான முடிவுகள் பிறக்கும். தொழில் சார்ந்த பயணம் மூலம் மனதில் நினைத்த காரியம் ஈடேறும். சமூகப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். ஓய்வு நிறைந்த நாள்.

கடக ராசி

உறவுகள் இடத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். எளிதில் முடிய வேண்டிய வேலைகள் தாமதமாகி முடியும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் உண்டாகும். வீடு, வாகனத்தை சரி செய்வீர்கள். மனதில் புது விதமான சிந்தனைகள் உருவாகும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் நெருக்கடிகள் குறையும். உத்தியோக பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் அமையும். பக்தி நிறைந்த நாள்.

சிம்ம ராசி

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கல்வி கற்கும் மாணவர்களுக்கு புது விதமான மாற்றங்கள் ஏற்படும். நெருக்கமானவர்களின் ஆதரவுகள் மூலம் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். தொண்டை தொடர்பான வலிகள் படிப்படியாக குறையும். புதிய செயல் திட்டங்களை அமைத்து அதை செயல் வடிவில் மாற்றுவதற்கான எண்ணங்கள் மேம்படும். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் உருவாகும். தனம் நிறைந்த நாள்.

கன்னி ராசி

தன வரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். புதிய நபர்களால் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். பற்கள் தொடர்பான பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். போட்டி நிறைந்த நாள்.

துலாம் ராசி

மாணவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். திறமைக்கேற்ப உயர்வு உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சக ஊழியர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். தவறிப் போன சில வாய்ப்புகள் மீண்டும் ஏற்படும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வியாபாரப் பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். அசதி மறையும் நாள்.

விருச்சிக ராசி

பணி நிமித்தமான மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுபகாரியங்களில் இருந்துவந்த இழுபறிகள் விலகும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல்கள் உண்டாகும். பயணங்கள் மூலம் ஆதாயம் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வர்த்தகப் பணிகளில் சிந்தித்து செயல்படவும். பொறுமை வேண்டிய நாள்.

தனுசு ராசி

வியாபாரப் பணிகளில் சிறு தாமதங்கள் தோன்றி மறையும். தனிப்பட்ட ஆசைகள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். மறை சக்திகளை பற்றிய புரிதல் உண்டாகும். அரசு செயல்களில் அலைச்சல்கள் மேம்படும். சிந்தனைப் போக்கில் மாற்றங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகளிடத்தில் விட்டுக் கொடுத்துச் செல்லவும். நற்செயல் நிறைந்த நாள்.

மகர ராசி

பயணங்களில் அனுபவமும், அனுகூலமும் உருவாகும். இழுப்பறியான பணிகளைச் செய்து முடிப்பீர்கள். மனை சார்ந்த பணிகளில் லாபம் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். செய்கின்ற முயற்சிக்கு உண்டான பலன்கள் ஏற்படும். விதண்டாவாத சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. நண்பர்கள் வழியில் ஒத்துழைப்பும் ஆதாயமும் ஏற்படும். பணிவு வேண்டிய நாள்.

கும்ப ராசி

சுபகாரிய முயற்சிகள் கைகூடும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். தந்தை வழி ஒத்துழைப்புகள் கிடைக்கும். அக்கம், பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். எழுத்து தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். ஆர்வம் மேம்படும் நாள்.

மீன ராசி

வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பொன், பொருட்சேர்க்கை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் விதண்டாவாதங்களைத் தவிர்க்கவும். அனுபவம் உள்ளவர்களின் ஆலோசனைகள் நல்ல ஒரு முன்னேற்றத்தை ஏற்படுத்தும். குழந்தைகளின் செயல்களில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். திறமை வெளிப்படும் நாள்.