Rasi Palan Today (13-10-2026): துலாமுக்கு ஏமாற்றம்.. தனுசுக்கு சிரமம்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்ல நாளா?

2 weeks ago 4
ARTICLE AD

அக்டோபர் மாதம் 13ம் தேதி செவ்வாய்கிழமையான இன்று புரட்டாசி மாதத்தின் 26ம் தேதியாகும். இன்றைய நாளின் 12 ராசிகளுக்குமான பலன்களைப் பற்றிக் காணலாம்.

இன்றைய ராசிபலன்கள் (அக்டோபர் 13)

மேஷம்

உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் சாதகமாகும். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் அறிமுகம் மேம்படும். காரிய அனுகூலம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடன் மனம் விட்டு பேசவும். மற்றவர்களுக்கு உதவுவது திருப்தியை தரும்.

ரிஷபம்

வியாபார பணிகளில் புதிய ஒப்பந்தங்கள் கைக்கூடும். கனிவான பேச்சுக்களால் காரியத்தை சாதிப்பீர்கள். வழக்குகளில் சில திடீர் திருப்பங்கள் ஏற்படும். பழைய சிக்கல்களுக்கு தெளிவுகள் பிறக்கும். ஆன்மிகப் பணிகளில் சில புரிதல் ஏற்படும். கடன் சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். சவாலான பணிகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள்.

மிதுனம்

உத்தியோக மாற்றம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து முடிவெடுக்கவும். கடன் தொடர்பான சில பிரச்சனைகள் குறையும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். வழக்கு தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த இழுபறி குறையும்.

கடகம்

மேல்நிலை கல்வி தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். புதுமையான செயல்பாடுகளில் ஈடுபாடுகள் உண்டாகும். வாகன பயணங்கள் மூலம் லாபங்கள் உண்டாகும். உடல் தோற்றப்பொலிவில் மாற்றங்கள் ஏற்படும். ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். கால்நடைகளின் மூலம் மேன்மை உண்டாகும்.

சிம்மம்

விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் நினைத்த செயல்களை முடிப்பீர்கள். புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். திடீர் பயணம் மூலம் மாற்றம் ஏற்படும். அக்கம்பக்கம் இருப்பவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும்.

கன்னி

சவாலான வாதங்களையும் சாதுர்யமாக வெற்றி கொள்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பார்த்து இருந்த உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் வழியில் மதிப்புகள் ஏற்படும். புதிய ஒப்பந்தங்களில் கவனம் வேண்டும். சக ஊழியர்களிடத்தில் ஆதரவு ஏற்படும். மனதளவில் உற்சாகம் பிறக்கும்.

துலாம்

குணநலங்களில் சில மாற்றம் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான எண்ணங்கள் உண்டாகும். கணவன்-மனைவியிடையே புரிதல் அதிகரிக்கும். மறதி தொடர்பான பிரச்சனைகள் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல்கள் உண்டாகும். வெளிவட்டத்தில் புதிய அனுபவம் ஏற்படும்.

விருச்சிகம்

எந்த ஒரு செயலிலும் ஆர்வமின்மையுடன் செயல்படுவீர்கள். மனதில் புது விதமான சிந்தனைகள் ஏற்படும். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். கால்நடைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உத்தியோக பணிகளில் பதற்றம் இன்றி செயல்படவும். கூட்டாளிகள் இடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும்.

தனுசு

இழுபறியான பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். மனதில் இருந்து வந்த குழப்பம் நீங்கும். காப்பீட்டு துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் ஏற்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஆதரவு மற்றும் ஒத்துழைப்புகள் மேம்படும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.

மகரம்

வியாபாரத்தில் அறிமுகம் உண்டாகும். ஆன்மீகப் பணிகளில் தெளிவுகள் ஏற்படும். வெளியூர் பயண வாய்ப்புகள் கைகூடும். நீதித்துறைகளில் புதிய அனுபவம் உருவாகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில வரவுகள் சாதகமாகும்.

கும்பம்

எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் மூலம் நன்மைகள் ஏற்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் துரிதம் ஏற்படும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வாழ்க்கை துணைவருடன் சிறுதூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். நிர்வாக சார்ந்த பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

மீனம்

பழைய பிரச்சனைகள் மீண்டும் தொடங்கும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். பேச்சுகளில் கனிவு வேண்டும். வியாபாரத்தில் புதிய முடிவுகளை தவிர்க்கவும். அதிகாரிகளிடம் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். சிந்தனைப்போக்கில் கவனம் வேண்டும்.

Read Entire Article