Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!

3 weeks ago 3
ARTICLE AD

அக்டோபர் மாதத்தின் 6ம் தேதியான இன்று புரட்டாசி மாதத்தின் 19ம் நாளாகும். தேய்பிறை ஏகாதசியான இன்று பெருமாளுக்கு உகந்த நாளாகும். இந்த நாளின் 12 ராசிகளுக்குமான பலன்களைக் காணலாம்

இன்றைய ராசிபலன்கள் (அக்டோபர் 6)

மேஷம்

சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். தந்தை பற்றிய சிந்தனைகள் அவ்வப்போது தோன்றி மறையும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். ஓட்டுநர் துறைகளில் இருந்து வந்த இழுபறியான சூழல் மறையும். விவசாய பணிகளில் மேன்மை உண்டாகும். கல்வி பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.

ரிஷபம்

எதிலும் ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். வரவுகள் தேவைக்கு இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். சகோதர வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

மிதுனம்

மனதில் இருந்த குழப்பங்கள் விலகும். நிதானமான பேச்சுக்கள் உங்கள் மீதான நன்மதிப்பை மேம்படுத்தும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அடிப்படை கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும்.

கடகம்

புதிய வேலைக்கான சிந்தனைகள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். வாக்குறுதிகள் அளிக்கும் பொழுது சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படவும். எதிலும் தற்பெருமை இன்றி செயல்பட்டால் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.

சிம்மம்

விலகிச் சென்றவர்கள் பற்றிய எண்ணம் மேம்படும். சுதந்திர மனப்பான்மையும் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் மாற்றங்கள் பிறக்கும். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். புதிய செயல்களில் சிந்தித்து செயல்படவும்.

கன்னி

மனதில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். சகோதரி வழியில் அனுகூலம் உண்டாகும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். உத்தியோக பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் இலாபம் உண்டாகும்.

துலாம்

தொழில் தொடர்பான புதிய பயணங்கள் மற்றும் அனுபவங்கள் ஏற்படும். வீட்டை மனதிற்கு பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள். வரவுகளில் இருந்த தாமதம் மறையும். உத்தியோகத்தில் திறமைக்கேற்ப முன்னேற்றம் காணப்படும். அறிவியல் சார்ந்த துறைகளில் ஈடுபாட்டுடன் கலந்து கொள்வீர்கள். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் அலைச்சலும் விரயமும் உண்டாகும்.

விருச்சிகம்

வழக்கு பணிகளில் நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். மருந்து பொருட்கள் வியாபாரத்தில் லாபங்கள் மேம்படும். மனதில் சஞ்சலமான சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் உருவாகும். வரவு தொடர்பான செயல்களில் சிந்தித்து செயல்படவும். ஆராய்ச்சி கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோகம் பணிகளில் அவசரமின்றி செயல்படுதல் மூலம் நன்மதிப்பு உருவாகும்.

தனுசு

காப்பீடு தொடர்பான பணிகளில் தனவரவுகள் ஏற்படும். நீண்ட நாட்களாக இருந்து வந்த இன்னல்கள் குறையும். மனம் விரும்பிய செயல்களை செய்து மகிழ்வீர்கள். நெருக்கமானவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் ஒற்றுமை அதிகரிக்கும். பொதுமக்கள் பணிகளில் இருப்பவர்களுக்கு லாபகரமான வாய்ப்புகள் கிடைக்கும்.

மகரம்

புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணிகளில் திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மனை தொடர்பான பணிகளில் இலாபம் மேம்படும். மனதிற்குப் பிடித்த செயல்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். உறவினர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை உருவாக்கும்.

கும்பம்

ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். செயல்பாடுகளில் புதிய மாற்றங்கள் பிறக்கும். எந்த ஒரு செயலிலும் சோர்வின்றி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். சந்தேக உணர்வுகளை தவிர்த்து சரியான முடிவுகளை எடுப்பீர்கள். எதிர்பாலின மக்கள் மூலம் ஏற்பட்டிருந்த பிரச்சனைகளுக்கு தீர்வுகளும், உதவிகளும் கிடைக்கும்.

மீனம்

நிர்வாகப் பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். மனதில் புதுவிதமான ஆசைகள் உருவாகும். முதுநிலை கல்வி விஷயங்களில் ஆலோசனைகள் கிடைக்கும். கடன் செயல்களில் சிந்தித்து செயல்படவும். இயந்திர பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழல் காணப்படும். தீர்க்கமான சிந்தனைகள் மூலம் பாராட்டுகள் கிடைக்கும்.

Read Entire Article