வன்னியர் சங்கம் நடத்திய சித்திரை முழு நிலவு மாநாடு மாமல்லபுரத்தில் நடந்தது. இந்த மாநாட்டிற்கு தலைமை தாங்கி பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், நாம் 12 ஆண்டுகளுக்கு முன்பு கூடினோம். இப்போது மீண்டும் கூடுகிறோம். குறிஞ்சி மலர் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் என்று சொல்வார்கள். மகாமகம் அப்படி நடக்கும். மாவீரன் குரு இருந்தால் தொடர்ந்து இந்த மாநாட்டை தொடர்ந்த இந்த மாநாட்டை நடத்தியிருப்பார்.

அவர் இல்லை என்ற ஏக்கத்துடன் இந்த மாநாட்டை நடத்திக் கொண்டிருக்கிறோம். முழு ஒத்துழைப்பு கொடுத்த அரசுக்கும், காவல்துறைக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். 10.5 சதவீத இட ஒதுக்கீடு சொல்லிக்கொண்டே இருக்கிறீர்களே தவிர கொடுக்குற மாதிரி இல்லை. அதனால் போராட்டத்தை அறிவியுங்கள் என்று எதிர்பார்த்து வந்துள்ளீர்கள் என்று எனக்கு தெரியும்.

நிச்சயமாக போராட்டத்தை அறிவிப்போம். இதுவரை நடந்திராத போராட்டம் அதுவாகத்தான் இருக்கும். மயிலே மயிலே என்றால் இறகு போடாது. இந்த போராட்டத்திற்காக நாம் எவ்வளவு தியாகத்தையும் செய்வதற்கு தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.