Ram Charan : ஆலியா பட் மகள் பெயரில் ராம் சரண் தத்தெடுத்த யானை...இது என்ன வித்தியாசமான பரிசா இருக்கு

1 year ago 7
ARTICLE AD

ஆலியா பட்

பாலிவுட் நடிகை ஆலியா பட் பிரபல தெலுங்கு நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடித்த ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் இருந்தே இரு நடிகர்களுடனும் நெருங்கிய நட்புறவில் இருந்து வருகிறார். ஆர்.ஆர்.ஆர் படத்தின் போது மூவருக்கும் வெவ்வேறு நாள் படப்பிடிப்பு இருந்ததால் தங்களால் சரியாக பழக முடியவில்லை என்றும் ஆனால் படத்தின் ப்ரோமோஷன்களின் போது மூவரும் நெருங்கிய நண்பர்ளாகிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார. மேலும் தனது மகளுக்காக நடிகர் ராம் சரண் வழங்கிய ஒரு அழகான பரிசைப் பற்றியும் அவர் சமீபத்தில் பகிர்ந்து கொண்டார்.

ஆலியா பட் மகள் பெயரில் யானையை தத்தெடுத்த ராம் சரண்

" என் மகள் ராகா பிறந்த ஒரு மாதத்திற்கு பின் நான் வெளியே நடைபயிற்சி செய்துகொண்டிருந்தேன். அப்போது ராம் சரணிடம் இருந்து ஒரு யானை பரிசாக வந்திருப்பதாக எனக்கு தெரிவித்தார்கள். ஒரு உண்மையான யானை தான் என் முன்னாள் வரப்போக்கிறது என்று நான் நினைத்தேன். அப்புறம் தான் தெரிந்தது அது ஒரு மரத்தால் செய்யப்பட்ட யானை. என் மகளின் பெயரில் ராம் சரண் ஒரு காட்டு யானையை தத்தெடுத்திருக்கிறார். அதற்கு சின்னமாக இந்த யானையை அவர் அனுப்பி வைத்தார். அந்த மர யானை எங்கள் டைனிங் டேபிள் அருகில் தான் எப்போதும் இருக்கும் . என் மகள் அடிக்கடி அதில் ஏறி உட்கார்ந்துக் கொள்வாள்.

பாலிவுட்டின் கோடீஸ்வர குழந்தை

ரன்பீர் மற்றும் ஆலியா பட் சமீபத்தில்  மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் புதிய பங்களா ஒன்றை கட்டியுள்ளனர். ரன்பீர் கபூரின் தாத்தாவான ராஜ் கபூருக்கு சொந்தமான இந்த பங்களா அவரது இறப்புக்குப் பின் ரன்பீருக்கு சொந்தமாகியுள்ளது. இப்படியான நிலையில் இந்த பங்களாவை புதுப்பிக்கும் பணிகளை கடந்த சில ஆண்டுகளாக செய்து வருகின்றனர் ரன்பீர் மற்றும் ஆலியா. ஏற்கனவே பாந்த்ரா பகுதியில் இந்த தம்பதிக்கு சொந்தமாக 60 கோடி மதிப்புள்ள நான்கு அபார்ட்மெண்ட்  உள்ளன. தற்போது தனது தாத்தாவின் பழைய வீட்டை 250 கோடி ரூபாய் மதிப்பில் தனது மனைவி ஆலியாவுடன் சேர்ந்து  புதுப்பித்துள்ளார் ரன்பீர் கபூர்.   250 கோடி மதிப்புள்ள இந்த வீட்டை ரன்பீர் மற்றும் ஆலிய தங்களது ஒரே மகளான ராகா கபூரின் பெயரில் பதிவு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பாலிவுட் சினிமாவில் மிகப்பெரிய பணக்கார குழந்தை என்கிற அந்தஸ்த்தை பெற்றுள்ளார் ராகா கபூர்.

Read Entire Article