<p><strong>Rajinikanth:</strong> நடிகர் ரஜினிகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில், நேற்று மாலை அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே மருத்துர்களுடன் கலந்தாலோசித்து திட்டமிட்டு தான், ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று அவருக்கு இதயம் தொடர்பன சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட இருப்பதாகவும், தற்போது வரை ரஜினியின் உடல்நிலை நிலையாக இருப்பதாகவும் அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. </p>