Rajinikanth: பாரதிராஜா எப்படி கதை கேட்பாரு தெரியுமா? சூப்பர்ஸ்டார் பகிர்ந்த ரகசியம்!

1 month ago 5
ARTICLE AD

தமிழ் திரையுலகின் ஜாம்பவான் இயக்குனர்களான பாரதிராஜா மற்றும் பாக்யராஜ் இவர்கள் இருவரின் நினைவேந்தலாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த் பங்கேற்றார்.

பாக்யராஜுற்கு செயின் போட்டது ஏன்?

அப்போது, அவர் பேசியதாவது, பாக்யராஜ் நான் போட்ட செயினை கடைசி வரை போட்டிருந்தார் என பூர்ணிமா சொன்னது எனக்கு ரொம்ப சந்தோஷம். எனக்கு தெரியும் அவர் ஆடம்பரமா ஏதும் போட்டுக்க மாட்டாரு. என்னமோ எனக்குத் தோணுச்சு அவருக்கு செயின் போடனும்னு.

சாதாரண மனிதர்கள் என்றால் ஒரு முறை, இரண்டு முறை பேசினால் போதும். இவர்கள் இருவரும் சாதாரண மனிதர்கள் அல்ல. அவர்கள் அசாதாரணமானவர்கள். எவ்வளவு வேண்டுமானாலும் அவர்கள் பற்றி பேசலாம். அவர்களிடம் பழகாமல் அவர்கள் படங்கள் மட்டுமே பார்த்து அவர்கள் காவியங்கள், பேச்சுக்கள் பார்த்து பேசும்போது 48 ஆண்டுகள் அவர்கள் உடன் இருந்து பழகி எனக்கு எத்தனை, எத்தனை நிகழ்வுகள், சம்பவங்கள் இருக்கும்.

கதை எப்படி கேட்பார்?

பாக்யராஜ் மற்றும் பாரதிராஜா இருவருமே கதையில் பாரதிராஜா மற்றவர்கள் கதையைத்தான் பண்ணுவார். அவர் கதை எழுதமாட்டார். கதாசிரியர் கதையை சொன்னால், 5 நிமிடத்தில் அந்த கதை எந்த பயணத்தில் பயணிக்கிறது? எப்படி என்ன ஆகும்? எங்கே இடைவேளை வரும்? எங்கே படம் முடியும் என்று தெரிந்துவிடும். உடனே போதும் போதும் என்று சொல்லிவிடுவார். நான் சொல்றேன் என்று அனுப்பிவிடுவார்.

அவர் நினைக்குற மாதிரி கதை போயிட்டு இருந்தால் ஆர்வமாக கதை கேட்பார். நான் நினைச்சது ஒன்னு, கதை வேறு மாதிரி இருக்கிறதே என்று  கேட்பார். மிகவும் சுவாரஸ்யமாக இருந்தால் இன்னும் ஒரு முறை சொல்லச் சொல்லி கேட்பார். ட்விஸ்ட், டர்ன் வந்தால் நாளைக்கு வா என்று கூப்பிட்டு எத்தனை எத்தனை சீன் வேண்டும்? எங்கெங்கே கதையை மெருகேற்ற வேண்டும்? என்ற அந்த கதை சொன்னவருக்கே மகுடம் வைத்து அனுப்பி வைப்பார். அது பாரதிராஜா.

பார்த்தது கிடையாது:

எப்படி ஒருவரிடம் ஒரு விஷயத்தை போட்டு அதை எடுத்து பண்ணனும்னு பாரதிராஜா மாதிரி ஒரு இயக்குனரை பார்த்தது கிடையாது. அதனால்தான் அவரிடம் அத்தனை இயக்குனர்கள், கதாசிரியர்கள் அவரால் உருவாக்கப்பட்டார்கள்.

இவ்வாறு பாரதிராஜா பற்றி ரஜினிகாந்த் பேசியிருப்பார்.

பாரதிராஜா இயக்கிய முதல் படமான 16 வயதினிலே படம் இன்றும் தமிழ் சினிமாவின் ஒரு அடையாளமாக உள்ளது. சிவாஜியின் பராசக்தி படம் போல பாரதிராஜாவின் 16 வயதினிலே படமும் ஒரு மிகப்பெரிய புரட்சியை தமிழில் ஏற்படுத்திய படம் ஆகும்.

ஸ்டூடியோவிற்குள் இருந்த சினிமாவை கிராமங்களுக்குள் முதன்முதலில் கொண்டு சென்ற பெருமைக்குச் சொந்தக்காரர் பாரதிராஜா. இந்த படத்தில் ரஜினி, கமல் மற்றும் ஸ்ரீதேவி நடித்திருப்பார்கள். இதில் நடித்த இவர்கள் 3 பேருமே உச்சநட்சத்திரமாக திரையுலகில் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றனர்.

கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் ரஜினிகாந்த் வில்லனாக பரட்டை என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

Read Entire Article