இந்திய திரையுலகின் சூப்பர்ஸ்டாராக உலா வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் பொதுமக்களின் நலன் மீது அக்கறை கொண்டு விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

போலீஸிடம் கூறுங்கள்:

நம்ம நாட்டோட பேரு, நிம்மதி அதைக் கெடுக்க பயங்கரவாதிகள் கடல் வழியாக நாட்டுக்குள்ள புகுந்து சில சம்பவங்கள் செய்வாங்க. அதுக்கு உதாரணம் மும்பையில் 2011ல் நடந்த அந்த கொலை சம்பவம். இது 175 பேரோட உயிரை வாங்கிடுச்சு.

கடலோர பகுதியில் வாழும் மக்கள் விழிப்புணர்வோடு இருந்து சந்தேகத்திற்குரிய மக்கள் யாரும் நடமாடினால் அருகில் இருக்கும் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கனும். 100 சிஎஸ்எஃப் வீரர்கள் கிட்டத்தட்ட 7 ஆயிரம் கிலோமீட்டர் இருந்து வெஸ்ட் பெங்கால்ல இருந்து கன்னியாகுமரி வரைக்கும் சைக்கிள் ரேலி போனாங்க.

அவங்க உங்க ஏரியாவுக்கு வரும்போது அவங்களை வரவேற்று முடிந்தால் அவங்க கூட கொஞ்ச தூரம் போயி அவங்களை உற்சாகப்படுத்துங்க. வாழ்க தமிழ் மக்கள். வளர்க தமிழ்நாடு. ஜெய்ஹிந்த். இவ்வாறு அவர் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

இந்திய நாடு 3 பக்கம் கடலாலும், ஒரு பக்கம் நிலத்தாலும் சூழப்பட்ட தீபகற்ப நாடு என்பதால் எப்போதும் 24 மணி நேரமும் பலத்த கண்காணிப்பு இருந்து கொண்டே உள்ளது. தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுப்பதற்காக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்காெண்டு வருகிறது. குறிப்பாக, மும்பை தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த் மக்கள் நலன் கருதி பொதுவெளியில் மேடைகளில் பேசும்போது இளைஞர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஆரோக்கியமான கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். இந்த சூழலில், தற்போது அரசின் சார்பில் இந்த விழிப்புணர்வு வீடியோ நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார்.