Rajinikanth: அகிலா கேட்டு அடம்பிடித்த ரஜினிகாந்த்.. மனம் திறந்த கே.எஸ்.ரவிக்குமார்!

4 weeks ago 5
ARTICLE AD

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித், மாதவன், சரத்குமார் என பல முன்னணி கதாநாயகர்களை வைத்து இயக்கியுள்ளார். கே.எஸ்.ரவிக்குமார் ரஜினிகாந்தை வைத்து முத்து, படையப்பா, லிங்கா ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

படையப்பா:

இதில் லிங்கா படம் தவிர முத்து, படையப்பா ஆகிய இரு படங்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதில் படையப்பா படத்தின்போது நடந்த சுவாரஸ்யமான நிகழ்வு பற்றி கே.எஸ்.ரவிக்குமார் மனம் திறந்து பேசியுள்ளார். அதில் அவர் பேசியதாவது,

அகிலா கேட்டு அடம்பிடித்த ரஜினிகாந்த்:

அகிலா என்பதை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள். ( அகேலா என்பது அகேலா கேமரா ட்ரோன். திரைப்படங்களில் நீண்ட தூர காட்சி, உயரமான காட்சி எடுக்க இதைப் பயன்படுத்துவார்கள்) ஜிம்மி ஜிப்பை விட 10 மடங்கு பெரியது. அவங்களுக்கு ஒரு இடம் கொடுத்திட வேண்டும். இந்த இடத்தில் ஒரு ஷாட் எடுக்க வேண்டும் என்றால், இந்த சாலைக்கு அந்த பக்கம் வைத்து பண்ணால் மட்டும் அது வரும். அதை கால்குலேட் பண்ணி அளப்பாங்க.

ரஜினி சார் என்னிடம் சார் நீங்க ரொம்ப சார்.. ரம்யா கிருஷ்ணனுக்கு மட்டும் அகிலா.. செளந்தர்யா ஹீரோயினுக்கு எல்லாம் அகிலா. எனக்கு மட்டும் ட்ராலி என்றார். சார் அவர்களை எல்லாம் அறிமுகப்படுத்த வேண்டும்.  உங்களை எல்லாம் ரசிகர்களுக்கு காட்ட வேண்டும். உங்களை அறிமுகப்படுத்த வேண்டியது கிடையாது சார். உங்களை எப்படி காமிக்கிறோம் என்பதுதான் சார்.

சிங்க நடை பாடல்:

இந்த அகிலாவில் உங்க முகத்தை அப்படி எல்லாம் காமிச்சு.. நீங்க பாம்பை எடுக்குறீங்க. கைக்கு  க்ளோஸ் அப் வந்து சிரிச்சுகிட்டே வந்து அப்படி பண்ணனும்னு ட்ராலிதான் சார் சரியா வரும் என்றேன். எங்களுக்கு எல்லாம் அகிலா கிடையாது அப்படி என்றார். உடனே வைடா அகிலா என்றேன். சிங்க நடை போட்டு அதில் பயன்படுத்திவிட்டேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

டாப் ஆங்கிள் காட்சி:

இதை அகேலா கேமரா ட்ரோன் என்று கூறுவார்கள். தமிழ் திரைப்பட பணியாளர்கள் இதை அகிலா என்றே கூறுவார்கள். 45 அடி முதல் 80 அடி வரையிலான உயரமான காட்சிகளை எடுக்க இது பயன்படுத்தப்பட்டது. சண்டைக்காட்சிகளில் பெரும்பாலும் இது பயன்படுத்தப்பட்டது.

டாப் ஆங்கிள் காட்சிகளுக்கு பொதுவாக இந்த அகேலா கேமரா க்ரேன் பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது ட்ரோன்கள் இதுபோன்ற காட்சிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் சில படங்களில் தொடர்ந்து இது பயன்படுத்தப்படுகிறது. ரஜினிகாந்த் நடித்த இந்த படையப்பா திரைப்படம் அவரது திரை வாழ்வில் மறக்க முடியாத படம் ஆகும். அந்தாண்டு வெளியான படங்களிலே மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் இதுவாகும். ரம்யா கிருஷ்ணன், செளந்தர்யா, மணிவண்ணன், லட்சுமி, செந்தில், ரமேஷ் கண்ணா என பல நட்சத்திரங்களுடன் சிவாஜி முக்கிய வேடத்தில் நடித்திருப்பார்.

Read Entire Article