Rajini Kamal: லோகேஷ் அவுட்? ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்கப்போவது இவரா? ஜெயிலர் 2 சம்பவம் செய்யுமா?

2 months ago 4
ARTICLE AD

Rajini Kamal Movie: ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிக்க உள்ள புதிய படத்தை இயக்கும் வாய்ப்பு, லோகேஷ் கனகராஜிடம் இருந்து பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மீண்டும் இணையும் ரஜினி - கமல்:

ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவின் அடையாளங்களாக இருப்பதோடு, இரண்டு உச்சநட்சத்திரங்கள் எப்படி நண்பர்களாக செயல்பட வேண்டும் என்பதற்கும் உதாரணமாக உள்ளனர். ஆரம்ப காலத்தில் இருவரும் பல படங்களில் இணைந்து நடித்தனர். அதன்பிறகு இருவரின் பாதைகளும் வெவ்வேறு இலக்குகளை நோக்கி பிரிய, தில்லு முல்லி படத்திற்கு பிறகு இருவரும் இணைந்து எந்த படத்திலும் நடிக்கவில்லை. இந்நிலையில் தான், 44 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவிருப்பது உறுதியாகியுள்ளது. இந்த அறிவிப்பு தமிழ் சினிமா ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினி கொடுத்த அப்டேட்

நிகழ்ச்சியில் ஒன்றில் பேசிய கமல், ரஜினியுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக அண்மையில் அறிவித்தார். இரண்டு உச்சநட்சத்திரங்களின் ரசிகர்களும் இதனை உற்சாகமாக கொண்டாடினர். மேலும், கமல் கொடுத்த அப்டேட் தொடர்பாக நேற்று கோவை விமான நிலையத்தில் ரஜினிகாந்திடம் கேள்வி எழுப்பியபோது, ராஜ் கமல் மற்றும் ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் நானும் கமலும் சேர்ந்து நடிக்க இருக்கிறோம். ஆனால், அதற்கான கதை மற்றும் இயக்குனர் உறுதி செய்யப்படவில்லை” என பதிலளித்தார். இதன் மூலம் தில்லு முல்லு படத்திற்கு பிறகு இந்த விண்டேஜ் கூட்டணி மீண்டுன் இணையும் படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

லோகேஷ் அவுட்?

கூலி திரைப்படம் வெளியாகி கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட போதே, ரஜினி மற்றும் கமல் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாகவும், அதனை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆரம்பத்தில் இது வெறும் வதந்தி என கூறப்பட்டாலும், இணைந்து நடிக்கவிருப்பதை தற்போது ரஜினி மற்றும் கமலே உறுதிப்படுத்தியுள்ளனர். அதேநேரம், இயக்குனர் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என ரஜினி தெரிவித்துள்ளார். பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாக இருக்கும் படத்தை லோகேஷ் தான் இயக்க திட்டமிடப்பட்டதாகவும், கூலி படம் எதிர்கொண்ட மோசமான விமர்சனங்களால், இயக்குனரை உறுதி செய்வதில் தயக்கம் தொடர்வதாகவும் கூறப்படுகிறது. ஆனால், தற்போது வரை ரஜினி மற்றும் கமல் இணையும் படத்தை, இயக்கும் வாய்ப்பு லோகேஷ் கையை விட்டு முழுமையாக நழுவவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

லிஸ்டில் புதிய இயக்குனர்?

இதனிடையே, ரஜினி தற்போது பிரமாண்ட வெற்றி பெற்ற ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ஜுன் மாதத்திற்கு பிறகு தான் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய கமர்ஷியல் வெற்றியுடன் உலகளவில் சுமார் 600 கோடி ரூபாய் வசூலித்ததாக கூறப்படுகிறது. அதே ஃபார்மிலும் ஜெயிலர் 2 ஹிட் அடித்தால், ரஜினி மற்றும் கமல் இணையும் புதிய படத்தினை நெல்சன் கூட இயக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த முடிவானது, ஜெயிலர் 2 படத்திற்கான வரவேற்பை பொறுத்து மாறக்கூடும் என தெரிகிறது. வெற்றி பெற்றவர்களின் மார்கெட்டை படத்திற்கு சாதகமாக பயன்படுத்தும் கலாச்சாரத்தை தான், உச்சநட்சத்திரங்களும் பின்பற்றுவார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.

ஜெயிலர் 2 சம்பவம் செய்யுமா?

கோல மாவு கோகிலா, டாக்டர் ஆகிய வெற்றி படங்களை தந்த நெல்சன், விஜயுடன் சேர்ந்து பணியாற்றிய பீஸ்ட் படத்தால் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். ஆனால், வசூல் ரீதியாக அந்த படமும் வெற்றிப் படமாக அமைந்தது. அதன் பிறகு இயக்கிய ஜெயிலர் படம், ரஜினி மற்றும் நெல்சனுக்கு பெரும் கம்பேக் ஆக அமைந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் ஜெயிலர் திரைப்படம் தற்போது தயாராகி வருகிறது. இதன் வெற்றி தான், ரஜினி மற்றும் கமல் இணைய உள்ள புதிய படத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என கூறப்படுகிறது.

Read Entire Article