Rajini coolie: டிக்கெட் புக்கிங் புயல்! விடுமுறை அறிவித்த நிறுவனம்! ரசிகர்களுக்கு கொண்டாட்டம்!

4 months ago 4
ARTICLE AD

கூலி படத்திற்கு விடுமுறை அறிவிப்பு, டிக்கெட் இலவசம் மற்றும் அன்னதானம் வழங்க நிறுவனம் முடிவு.

கூலி திரைப்படம்

இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டராக உலா வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் கூலி. வழக்கமாக ரஜினிகாந்த் படம் என்றாலே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் கூலி படத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

கூலி புக்கிங்

தமிழ் திரையுலகின் மிகப்பெரிய இயக்குனராக உருவெடுத்துள்ள லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கியிருப்பது இந்த எதிர்பார்ப்புக்கு மற்றொரு முக்கிய காரணம் ஆகும். சுதந்திர தின கொண்டாட்டமாக வெளியாக உள்ள இந்த படத்திற்கான டிக்கெட் முன்பதிவு நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு கூலி படத்திற்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. இரவு 8 மணிக்குத் தொடங்கியதும் ரஜினி ரசிகர்கள் மின்னல் வேகத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யத் தொடங்கினர்.

புயல் வேகத்தில் டிக்கெட் முன்பதிவு

இதனால், பல திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட் விற்றுத் தீர்த்தது. 14ம் தேதி வெளியாகும் கூலி திரைப்படம் வியாழக்கிழமை வெளியாக உள்ள நிலையில், வெள்ளி சுதந்திர தின விடுமுறை, சனி மற்றும் ஞாயிறு வார விடுமுறை என 4 நாட்கள் தொடர்ச்சியாக பல திரையரங்குகளில் கூலி ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடும் என்றே கருதப்படுகிறது. இந்நிலையில் தனியார் நிறுவனம் ஒன்று தங்கள் நிறுவனத்திற்கு கூலி திரைப்படத்தன்று விடுமுறை அளித்துள்ளது. மேலும் ரஜினியின் கூலி திரைப்படத்திற்கு டிக்கெட் வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

விடுமுறை அறிவிப்பு

நிறுவனத்தின் கடிதத்தில் “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் "கூலீ" திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு  வரும் 14-08-2025 அன்று விடுமுறை அறிவிக்க முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் மனிதவள (HR) துறைக்கு அதிக அளவில் விடுப்பு விண்ணப்பங்கள் வருவதைக் தவிர்க்க முடியும். மேலும், ரஜினிசம் 50ஆவது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, அந்நாளில் ஆதரவற்றோர் இல்லம் மற்றும் முதியோர் இல்லங்களில் உணவு வழங்கவும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கவும் திட்டமிட்டுள்ளோம்.

மேலும், UNO AQUA நிறுவன பணியாளர்களுக்கு இலவச திரைப்பட டிக்கெட் வழங்கும் சிறப்புரிமையையும் மேற்கொள்கிறோம்.  "அப்பாவும், தாத்தாவும் வந்தார்கள், போனார்கள்... தப்பென்ன, சரியென்ன — எப்போதும் ரஜினிசம் பண்ணு. "மகன்களும், பேரன்களும் வருவார்கள், இருப்பார்கள் - எங்கள் "The One & Only SUPER STAR" புகழ் பாட.." என்றும், தெரிவித்து., சென்னை, பெங்களூரு, திருச்சி, திருநெல்வேலி, செங்கல்பட்டு, மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் என அவர்களின் பல்வேறு கிளைகளுக்கும் விடுமுறை அளித்துள்ளனர்.

Read Entire Article