Rajesh unfulfilled Wish: சினிமாவில் கடைசி வரை நிறைவேறாமல் போன நடிகர் ராஜேஷின் ஆசை! பிரபலம் கூறிய தகவல்!

6 months ago 5
ARTICLE AD

தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் ராஜேஷ். உடல் நலக் குறைவு காரணமாக இன்று காலை உயிரிழந்தார். இவரது மரணம் தமிழ் திரையுலகை சேர்ந்த அனைவரையும் உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

'அவள் ஒரு தொடர்கதை' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர், பின்னர் கன்னி பருவத்திலேயே என்ற படத்தின் மூலமாக ஹீரோவாக மாறினார். ஹீரோவாக நடித்து வெற்றி பெற்றாலும், இவருக்கு குணச்சித்திர வேதங்கள் தான் அதிகம் கை கொடுத்தது. எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும், அப்படியே தன்னை மாற்றிக்கொண்டு அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து நடிப்பவர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என சுமார் 200-க்கும் அதிகமான படங்க்ளில் நடித்துள்ளார்.  இந்த நிலையில் தான் ராஜேஷ் ரத்த அழுத்த குறைபாடு காரணமாக... மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவருடைய உடல் தற்போது அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் உட்பட, பிரபலங்கள் பலர் அவரது உடலுக்கு தொடர்ந்து அஞ்சலி செலுத்திவருகிறார்கள்.

அந்த வகையில் பிரபல நடிகரும், இயக்குனருமான எஸ் வி சேகர் தன்னுடைய இரங்கலை தெரிவித்து... ராஜேஷின் நிறைவேறாமல் போன ஆசை பற்றி கூறியுள்ளார். ராஜேஷுக்கு ஒரு இயக்குனராக தமிழ் சினிமாவில் தடம் பதிக்கவேண்டும் என்பது அவரது ஆசையாம். அதுவும் கமல்ஹாசனை ஹீரோவாக வைத்து படம் இயக்க நினைத்தாராம். இதற்கான முயற்சி எடுக்கப்பட்ட போதிலும்... கடைசி வரை இவரது ஆசை நிறைவேறாமல் போனது என கூறியுள்ளார்.

Read Entire Article