Railway Budget 2024: தொடரும் விபத்துகளுக்கு முற்றுப்புள்ளி.. ரயில் பாதுகாப்புக்கு என தனி பட்ஜெட் ஒதுக்கப்படுமா?

1 year ago 7
ARTICLE AD

இந்தியாவின் ஜிடிபி அடுத்த மூன்றாண்டுகளில் 5 ட்ரில்லியன் டாலர்களாக வளரும் என கணிக்கப்படும் நிலையில், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுப்பதே இந்தியாவின் நோக்கமாக உள்ளது. வரும் 2047ஆம் ஆண்டுக்குள், வளர்ந்த நாடாக மாற முயற்சிகளை செய்து வருகிறது.

இதற்காக, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், இந்திய வளர்ச்சி திட்டத்தில் முக்கிய துறைகளில் ஒன்றாக ரயில்வே உள்ளது. நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், ரயில்வே உள்கட்டமைப்பை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில் அரசின் திட்டங்கள் அமையுமா என பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

எதிர்பார்ப்புகள் என்னென்ன?

ரயில்வே துறையில் மத்திய அரசுக்கு பெரும் இலக்குகள் உள்ளன. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் ரயில்வே முக்கியத்துவம் வாய்ந்த துறையாக உள்ளதால், பெரும் இலக்குகளை நனவாக்கவும் ரயில்வே துறையை நவீனமயமாக்க விரிவாக்கம் செய்ய அதிக நிதி தேவைப்படுகிறது.

எனவே, இதற்காக நாளைய பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிக நிதி ஒதுக்கினால் மட்டும் ரயில்களை மேலும் பயன் உள்ளதாகவும் பாதுகாப்பானதாகவும் நம்பகமானதாகவும் மாற்ற முடியும்.

அதிகவேக ரயில் திட்டங்கள், குறிப்பாக மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்திற்கு தொடர்ந்து அதிக நிதி ஒதுக்குவது அவசியம். ஜப்பானின் ஷிங்கன்சென் தொழில்நுட்பத்தின் உதவியோடு புல்லட் ரயில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்திய ரயில்வே துறையில் இது கேம் சேஞ்சராக பார்க்கப்படுகிறது.

புல்லட் ரயில் திட்டத்தை திட்டமிட்ட நேரத்தில் முடிப்பதும், புதிய அதிவேக ரயில் பாதைகள் தொடங்குவதும் ரயில் பயணிகளின் பயணத்திலும் ரயில் இணைப்பிலும் புரட்சியை ஏற்படுத்தும். இந்த அதிவேக ரயில் திட்டத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு 2023-24 நிதியாண்டில் தோராயமாக ரூ.18,500 கோடியாக இருந்தது.

பட்ஜெட்டில் ரயில் பாதுகாப்புக்கு தனி நிதி: கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் ரூ. 25,000 கோடியாக உயர்த்தப்பட்டது. மேலும் இது மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை எல்லாம் தாண்டி, ரயில் பாதுகாப்பை மேம்படுத்த முதலீடு செய்வது முதன்மையான முன்னுரிமையாக உள்ளது. பயணிகள் மற்றும் சரக்கு ரயில்களின் பாதுகாப்பை மேம்படுத்துதல், பாதையை புதுப்பித்தல், மேம்பட்ட சிக்னல் அமைப்புகளை நிறுவுவது, பாலத்தை வலுப்படுத்துவது, கவாச் பாதுகாப்பு கருவியை செயல்படுத்துதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு தனித்தனியே நிதி ஒதுக்குவது அவசியம்.

இந்த நடவடிக்கைகள் விபத்துகளைக் குறைப்பது மற்றும் இன்றி ரயில்வே நெட்வொர்க்கின் பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன. சமீப காலமாக, ரயில் விபத்துகள் தொடர் கதையாகி வரும் நிலையில், விபத்துகளைக் குறைக்கவும், பயணிகள் மற்றும் சரக்கு பாதுகாப்பை மேம்படுத்தவும் இந்த முக்கியமான பாதுகாப்பு மேம்பாடுகளுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.

Read Entire Article