தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திமுக மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதிமுக, நாம் தமிழர் மற்றும் தவெக என கடும் போட்டி உருவாகியுள்ள நிலையில், திமுக மிகவும் வலுவான கூட்டணியை உருவாக்கியுள்ளது.

கூட்டணியை உறுதி செய்த ப.சிதம்பரம்:

கடந்த ஓராண்டாக கூட்டணியில் இருப்பார்களா? இல்லையா? என்று திமுக-விற்கு மிகப்பெரிய தலைவலியை அளித்து வந்த காங்கிரஸ் 28 சட்டசபைத் தொகுதிகள், 1 ராஜ்யசபா தொகுதிக்கு உடன்பட்டு கூட்டணியில் நீடிக்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்க மிக முக்கிய காரணமாக இருந்தவர் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆவார்.

கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, கேரளா ஆகிய தென்மாநிலங்களுடன் ஒப்பிடும்போது காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் மிகவும் பின்தங்கிய நிலையிலே உள்ளது. இதனால், ராகுல்காந்தி தமிழக காங்கிரஸ் மீது மிகுந்த மன அதிருப்தியிலே இருந்து வருகிறார்.

சோனியா திட்டவட்டம்:

இந்த முறை விஜய்யுடன் கூட்டணி வைத்தால் தமிழ்நாட்டில் காங்கிரசின் செல்வாக்கு அதிகரிக்கும் என்றும், தமிழ்நாட்டில் காங்கிரசின் வாக்கு வங்கியும் அதிகரிக்கும் என்றும் ராகுல்காந்தியிடம் பலரும் வலியுறுத்தினர். இதனால், தவெக கூட்டணிக்கு செல்ல ராகுல்காந்தியிடமும் வலியுறுத்தினர். அதேசமயம், திமுக கூட்டணியில் நீடிக்க வேண்டுமென்றால் அதிக தொகுதிகள் ஒதுக்கீடு, 2 ராஜ்யசபா இடங்கள் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

ஆனால், தற்போது திமுக கூட்டணியில் நீடிப்பதே வரும் மக்களவைத் தேர்தலுக்கு ஆரோக்கியம் என்று சோனியாகாந்தி மூலமாக காய் நகர்த்தி இந்த கூட்டணியை நீடிக்க வைத்துள்ளார் ப.சிதம்பரம். கருணாநிதி காலம் முதல் திமுக-வுடன் நெருக்கமான நட்பு பாராட்டி வரும் சோனியாகாந்தியும் திமுக கூட்டணியிலே நீடிக்க ராகுல் காந்தியிடம் திட்டவட்டமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அதிருப்தியில் ராகுல் காந்தி:

28 தொகுதிகள் மற்றும் 1 ராஜ்யசபா தொகுதிகள் பங்கீட்டில் ராகுல் காந்திக்கு உடன்பாடு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், அந்த ஒரு ராஜ்யசபா சீட்டை ராகுல்காந்தியின் மிகவும் நெருக்கமான பவன்கெராவிற்கு வழங்க காங்கிரஸ் முயற்சித்த நிலையில், திமுக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கே வழங்க வேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. பின்னரே, கிறிஸ்டோபருக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டது.

இதுபோன்ற காரணங்களால் ப.சிதம்பரம் மீது ராகுல் காந்தி சற்று அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிரதமர் மோடியை ப.சிதம்பரம் பாராட்டியபோதும் ராகுல் காந்தி அதிருப்திக்கு ஆளானார் என்று தகவல்கள் வெளியானது.

தமிழ்நாட்டில் ஆட்சியிலும் பங்கு வேண்டும், அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸின் பல்வேறு இரண்டாம் கட்டத் தலைவர்கள் திமுக-விற்கு அழுத்தம் தரும் வகையில் பேசி வந்தனர். கிரிஷ் சோடங்கர் மூலமாகவும் திமுக கூட்டணிக்கு அழுத்தம் தர முயற்சித்தனர். ஆனால், திமுக மூலமாகவே கடந்த 10 வருடங்களாக வாக்கு வங்கியை தக்கவைத்து வரும் காங்கிரஸ் அடுத்த மக்களவைத் தேர்தல் வரை திமுக கூட்டணியில் நீடிப்பதே அவர்களுக்கு நல்லது என்று ப.சிதம்பரம் போன்ற மூத்த தலைவர்கள் கருதி வருகின்றனர்.