R Ashwin: வாய வச்சிட்டு சும்மா இருக்கணும்.. அஸ்வினை சாத்தியெடுத்த சிஎஸ்கே.. ஏன் தெரியுமா?

8 months ago 8
ARTICLE AD

மோசமான ஃபார்மில் CSK:

2025 ஐபிஎல் தொடரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிக மோசமான  தொடங்கியுள்ளது. ஐந்து முறை ஐபிஎல் சாம்பியன்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட அணி, அதன் முதல் நான்கு போட்டிகளில் மூன்றில் தோல்வியடைந்துள்ளது.  சென்னை அணியின் கோட்டை என்று அழைக்கப்படும் சேப்பாக்கம் மைதானத்திலேயே சென்னை அணி தோல்வியடைந்து, கோட்டையில் ஓட்டை விழ தொடங்கியது.

சிஎஸ்கே அணியின் வீரர்கள் இன்னும் சிறப்பாக செயல்படவில்லை என்றாலும், ஆப்கானிஸ்தான் இடது கை  சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமதுவின் ஆட்டம் மட்டுமே அந்த அணிக்கு சாதகமாக ஆறுதலாக உள்ளது. நான்கு போட்டிகளில் 10 விக்கெட்டுகளுடன், தற்போது ஐபிஎல் 2025ல் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

சர்ச்சையான வீடியோ:

இருப்பினும், ஏப்ரல் 5 ஆம் தேதி சிஎஸ்கே டிசி அணியிடம் தோல்வியடைந்த பிறகு , ரவிச்சந்திரன் அஸ்வின் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்றில் நூர் அகமது விமர்சனத்திற்கு உள்ளானார். டிசி அணிக்கு எதிராக ஒரு விக்கெட் எடுத்த பிறகு, ஆப்கானிஸ்தான் நட்சத்திர வீரர் நூர் அகமதுவை ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் சிஎஸ்கே தேர்வு செய்திருக்கக் கூடாது என்று கிரிக்கெட் ஆலோசகரான் பிரசன்னா(PDogg)  கூறினார். அவருடைய கருத்துக்கு சமூக வலைதளங்களில் பேசு பொருளானது. இது சென்னை அணியின் முன்னாள் வீரரான அனிருத்தா ஸ்ரீகாந்துக்கும் கடுமையான விமர்சனத்தை எடுத்து வைத்திருந்தார். இதற்கிடையில் அஷ்வின் சேனலில் இருந்து அந்த வீடியோவானது டெலிட் செய்யப்பட்டுள்ளது

அஷ்வின் சேனல் விளக்கம்:

தற்போது, ​​அஷ்வின் சேனல் ஒரு விளக்கத்தை வெளியிட்டுள்ளது. "கடந்த வாரத்தில் இந்த சேனலில் நடந்த விவாதங்களின் தன்மையைக் கருத்தில் கொண்டு, விஷயங்களை எவ்வாறு விளக்கலாம் என்பதை நாங்கள் கவனத்தில் கொள்ள விரும்புகிறோம், மேலும் இந்த சீசன் முழுவதும் CSK விளையாட்டுகளை, முன்னோட்டங்கள் மற்றும் ரிவ்யூ என இரண்டையும் வீடியோவாக வெளியிட தவிர்ப்பதற்கு நாங்கள் தேர்வு செய்துள்ளோம்," என்று அஷ்வின் சேனல் நிர்வாகியின் குறிப்பு கூறுகிறது.

"எங்கள் நிகழ்ச்சிகளில் வரும் பன்முகத்தன்மை கொண்ட கண்ணோட்டங்களை நாங்கள் மதிக்கிறோம், மேலும் உரையாடல் நாங்கள் நிறுவிய தளத்தின் நேர்மை மற்றும் நோக்கத்திற்கு உண்மையாக இருப்பதை உறுதி செய்வதில் உறுதியாக இருக்கிறோம். எங்கள் விருந்தினர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்கள் அஷ்வினின் தனிப்பட்ட கருத்துக்களைப் பிரதிபலிக்கவில்லை," என்று கூறியுள்ளது.

ஃப்ளெமிங்கிடமும் கேள்வி:

முன்னதாக, சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங்கிடமும் இது குறித்து கேட்கப்பட்டது. "நண்பா, எனக்கு எதுவும் தெரியாது. அவருக்கு ஒரு சேனல் இருப்பது கூட எனக்குத் தெரியாது, அதனால் நான் அந்த விஷயங்களைப் பின்தொடர்வதில்லை. அது பொருத்தமற்ற," என்று அவர் போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

CSK Coach on the criticism on Ashwin's Youtube channel: [Press/TOI]

"I have no idea. I didn't even know he had a youtube channel, so I don't follow that stuff - That is irrelevant". pic.twitter.com/UFY4qeHmz5
— Johns. (@CricCrazyJohns) April 6, 2025

தொடர் தோல்விகளை சந்தித்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாளை பலம் வாய்ந்த பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்க்கொள்ள உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article