Pushpa 2 : புஷ்பா 2 டிரைலர் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

1 year ago 8
ARTICLE AD

புஷ்பா 2

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரரான அல்லு அர்ஜூன் நடித்துள்ள புஷ்பா படத்தின் இரண்டாவது பாகம் டிசம்பர்-5 ம் தேதி வெளியாக இருக்கிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான புஷ்பா திரைப்படம் மொழிகடந்த வெற்றிபெற்றது. மேலும் இப்படத்திற்காக நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் இசையமைப்பாளர் தேவிஶ்ரீ பிரசாத் தேசிய விருது வென்றது குறிப்பிடத் தக்கது.

புஷ்பா 2 டிரைலர்

முந்தைய பாகத்தைப் போலவே இப்படத்திலும் ராஷ்மிகா மந்தனா , ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட்வர்கள் இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். தேவிஶ்ரீ பிரசாத் பாடல்களுக்கு இசையமைக்க தமன் இப்படத்திற்கு பின்னணி இசையமைத்துள்ளார். மேலும் முந்தைய படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தது போல இந்த பாகத்தில் ஶ்ரீலீலா கேமியோ செய்துள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

புஷ்பா 2 படத்தின் டிரைலர் வரும் நவம்பர் 17 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் அல்லு அர்ஜூன் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள்.

ALLU ARJUN - RASHMIKA - FAHADH FAASIL... 'PUSHPA 2’ TRAILER ARRIVES ON 17 NOV... Mark your calendars... #Pushpa2TheRuleTrailer on [Sunday] 17 Nov 2024 at 6.03 pm... The trailer will be unveiled at a grand event in #Patna.#Pushpa2TheRule | #AlluArjun | #FahadhFaasil |… pic.twitter.com/O6wFnx00CN
— taran adarsh (@taran_adarsh) November 11, 2024

ஓடிடி உரிமை:

புஷ்பா- 2 படத்திற்கான ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் நெட்ஃப்ளிக்ஸில் இந்த படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதன் மதிப்பு மட்டும் ரூபாய் 270 கோடி ரூபாய் அளவிற்கு என்று கூறப்படுகிறது.

புஷ்பா படம் திரையரங்கில் வெளியிடுவதற்கான வர்த்தகம் மட்டும் தற்போது வரை ரூபாய் 650 கோடி வரை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூபாய் 500 கோடி பட்ஜெட்டில் புஷ்பா 2 படம் உருவாகியுள்ளதாக தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னடத்தில் கே.ஜி.எஃப் 2 , தெலுங்கில் பாகுபலி 2 ஆகிய படங்களைப் போல புஷ்பா 2 படமும் பான் இந்திய படமாக உருவாகியுள்ளது. இந்த ஆண்டு தெலுங்கு சினிமாவில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸை ஆட்டம் காண வைக்கும் படமாக புஷ்பா 2 இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வருகிறது

Read Entire Article