புஷ்பா 2

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்துள்ள புஷ்பா 2 திரைப்படம் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி வெளியானது. ராஷ்மிகா மந்தனா , ஃபகத் ஃபாசில் , முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். தேவிஶ்ரீ பிரசாத் பாடல்களுக்கும் சாம் சி.எஸ் பின்னணி இசையமைத்துள்ளார்.

ஆறு நாளில் ஆயிரம் கோடி

புஷ்பா 2 திரைப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ 282 கோடி வசூலித்தது. முன்னதாக ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் முதல் நாளில் 233 கோடி வசூலித்து அதிக வசூல் ஈட்டிய படங்களில் முதலிடத்தில் இருந்தது. புஷ்பா 2 திரைப்படம் இந்த சாதனையை முறியடித்தது. தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் படம் இந்திய சினிமாவின் வரலாற்றில் பார்க்காத வசூல் சாதனைகளை படைத்து வருகிறது. தற்போது படம் வெளியாகிய ஆறு நாட்களில் உலகளவில் ரூ 1000 கோடி வசூலித்துள்ளது புஷ்பா 2.