Puducherry Power shutdown: புதுச்சேரியில் இன்று மின் தடை! எந்தெந்த பகுதியில் மின் தடை தெரியுமா ?

4 months ago 5
ARTICLE AD

Puducherry Power shutdown: புதுச்சேரியில் 07.08.2025 இன்று காலாப்பட்டு மின்பதை மற்றும் சுற்றுவட்டார மின்பாதை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் (காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை) அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி முழுவதும் பொதுமக்கள் மற்றும் மின் நுகர்வோருக்கு மின் விநியோகம் செய்யும் பணியை புதுவை மின் துறை செய்து வருகிறது. இந்த மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் நோக்கில் மின்துறை சுழற்சிமுறையில் மாதாந்திர மின் பாதை பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது வழக்கம். அத்தகைய சமயங்களில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படும். இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் வியாழக்கிழமை இன்று (07.08.2025) மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.

காலாப்பட்டு துணை மின் நிலையம்

காலாப்பட்டு துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பிம்ஸ் மருத்துவமனை, சுனாமி குடியிருப்பு, மத்திய சிறைச்சாலை, ஷாசன் நிறுவனம், ஸ்டடி பள்ளி, நவோதயா வித்யாலயா பள்ளி, சட்டக்கல்லூரி, அம்மன் நகர், பெரிய காலாப்பட்டு மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோர்க்காடு துணை மின்நிலையம்

அதேப்போல் புதுச்சேரி கோர்க்காடு துணை மின்நிலையத்தில் இருந்து செல்லும் மங்கலம் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கோர்க்காடு, பங்கூர், வடமங்கலம், மங்கலம், அரியூர், அனந்தபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

மின்சார நிறுத்தம்

மின்சார நிறுத்தம் (power outage) என்பது மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் மின்மாற்றிகள் அல்லது மின் பாதைகளில் பணிகளைச் செய்வதற்காக அந்த மின்சாரப் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் வழங்காமல் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சில வேளைகளில் மின் பற்றாக்குறை போன்ற சில காரணங்களினாலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாகச் செய்யப்படும் மின்சார நிறுத்தம் மின்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது.

துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படலாம். குறிப்பாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை பராமரிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும்போது மின் தடை ஏற்படலாம்.

துணை மின் நிலைய சேவைகளை ஆதரித்தல்

துணை மின்நிலைய பழுது மற்றும் பராமரிப்பு

துணை மின்நிலைய சோதனை & செயல்பாட்டுக்குக் கொண்டுவருதல்

துணை மின் நிலைய ஆட்டோமேஷன் அமைப்பு சோதனை மற்றும் ஆணையிடுதல்

மின்மாற்றி பழுதுபார்ப்பு & சேவை

தொழிற்சாலை சர்க்யூட் பிரேக்கர் பழுதுபார்ப்பு

பாதுகாப்பு சோதனை

இரண்டாம் நிலை துணை மின்நிலைய சோதனை

Read Entire Article