Premalatha's Fiery Speech : ’காவிரி நீர் விவகாரம்’ சட்டப்பேரவையில் பிரேமலதா மாஸ் பேச்சு – வியந்து பார்த்த விஜய்..!

4 months ago 9
ARTICLE AD

மேகதாது அணைக்கு எதிராக முதலமைச்சர் விஜய் கொண்டுவந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மேகதாது அணையை நாம் அனைவரும் ஒன்றிணைத்து தடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதோடு, காவிரி நீர் விவகாரம் தொடர்பாக பேசுவதற்கு தனக்கு எந்த குறிப்பும் தேவையில்லை என்று குறிப்பிட்ட பிரேமலதா

மூன்று முதல்வர்களையும் குறிப்பிட்டு பிரேமலதா பேச்சு

கடந்த ஆட்சி காலத்தில் ஜெயலலிதா, கலைஞர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் என மூன்று முதலமைச்சர்களும் காவிரி நீருக்காக பல போராட்டங்களையும் சட்டமன்றத்தில் பல தீர்மானங்களும் நிறைவேற்றியிருக்கிறார்கள் என சுட்டிக்காட்டிய பிரேமலதா விஜயகாந்த். தேவைப்பட்டால் விஜயகாந்த போன்று அனைத்து கட்சித் தலைவர்களை அழைத்துக்கொண்டு முதலமைச்சர் விஜய் டெல்லி சென்று பிரதமரை சந்திக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

நதிகளை இணைக்க வலியுறுத்தல்

அதோடு, தண்ணீர் என்பது மிகவும் முக்கியமானது என்றும் பேரவைக்கு வந்ததும் முதலில் கொடுக்கப்படுவது தண்ணீர் தான் எனவும் குறிப்பிட்டு பேசிய பிரேமலதா. தமிழ்நாட்டில் உள்ள ஆறுகளையெல்லாம் இணைக்கவும், குளங்கள், ஏரிகளை தூர்வாரம் போர்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Read Entire Article