வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் மிகவும் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் 'தி கோட்'. ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரித்துள்ள இப்படத்தில் பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, ஜெயராம், மோகன், லைலா, மீனாட்சி சவுத்ரி, வைபவ், அஜ்மல், பிரேம்ஜி என மிக பெரிய திரை பட்டாளமே நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வரும் செப்டம்பர் 5ம் 'தி கோட்' திரைப்படம் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. உலகத்தின் மூளை முடுக்கில் உள்ள அனைத்து விஜய் ரசிகர்களும் இப்படத்தின் ரிலீசுக்காக உற்று நோக்கி வருகிறார்கள்.

'தி கோட்' படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி விட்டதால் படக்குழுவினர் மிகவும் மும்மரமாக புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இப்படத்தின் பிரஸ் ரிலீஸ் ஈவென்ட் ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகர் பிரஷாந்த் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசி இருந்தார்.

கோட் படத்தில் நடிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்ததற்கு இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு முதலில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த படத்தின் கதையை பற்றி முதலில் இயக்குநர் என்னிடம் சொல்லும் போது இது விஜய் படம் தான் ஆனால் ஒரே பிரேமில் விஜய், நீங்கள் மற்றும் பிரபு தேவா மூவரும் சேர்ந்து டான்ஸ் பர்ஃபார்மன்ஸ் செய்வது போன்ற ஒரு பாடல் உள்ளது என சொல்லி தான் என்னை கவர்ந்தார். அதுதான் இந்த படத்தில் நான் நடிக்க ஓகே சொன்னதற்கான ஹூக் லைன்.

வெங்கட் பிரபு பார்ப்பதற்கு மிகவும் அமைதியானவராக ஜாலியான எளிமையானவராக தெரியலாம் ஆனால் அவரின் விஷன் மிக பெரியது. பயங்கரமான மூளைக்காரர். படத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட பிரபலமான நடிகர்கள் நடித்துள்ளனர். அனைவரையும் ட்ரைலருக்குள் கொண்டு வரவேண்டும் என்பது அவ்வளவு எளிதான ஒரு விஷயம் அல்ல. ஆனால் அதை மிகவும் சாமர்த்தியமாக செய்துள்ளார். இது போன்ற ஒரு நல்ல படம் எப்போதாவது தான் கிடைக்கும் . அதில் எனக்கு ஒரு வாய்ப்பை அமைத்து கொடுத்ததற்கு மிக்க நன்றி.

நடிகர் விஜய் பற்றி பேசியே ஆகவேண்டும். பலரும் விஜய் பிரதர் பற்றி பல விஷயங்கள் சொல்வார்கள். என்னை பொறுத்தவரையில் மிகவும் அடக்கமான ஒரு மனிதர். மற்றவர்களுக்காக நிறைய யோசிக்க கூடியவர். இந்த படத்தின் மூலம் எனக்கு இரண்டு பிரதர்கள் கிடைத்துள்ளனர். ஒருவர் தம்பி விஜய் மற்றவர் அண்ணன் பிரபுதேவா. தி கோட் படத்துக்கு நன்றி என பேசி இருந்தார் நடிகர் பிரஷாந்த்.