பிரபல திரைப்பட நடிகரும், நடன இயக்குநருமான பிரபு தேவா தனது குடும்பத்தினருடன் கர்நாடக மாநிலத்திலுள்ள குக்கே ஸ்ரீ சுப்பிரமணிய கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். பிரபுதேவாவின் மனைவி மற்றும் குடும்பத்தினர் மகாபிஷேக பூஜையை நடத்தி, கோயிலின் தலைமை பூசாரியிடமிருந்து பிரசாதத்தைப் பெற்றனர். அதன் பிறகு, கோயில் அலுவலகத்தில் பிரபு தேவா தம்பதியினருக்கு நிர்வாக அதிகாரி அரவிந்த் அய்யப்பா சுதகுண்டி சால்வை அணிவித்தும், மலர்களை வழங்கியும் கௌரவித்தார்.