Power Shutdown: மதுரையில் மின் தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு.

நாளை மதியம் வரை தடை

மதுரையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (22.05.2025) காலை 9.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் மூலம் தகவல் வெளிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று மின் வாரியம் மூலம் தகவல் அறிவிக்கப்படும்.

செயற்பொறியாளர் தகவல்

பராமரிப்பு பணிக்காக சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம், இந்நிலையில் இது குறித்து மதுரை கிழக்கு செயற்பொறியாளர் இரா.கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் நாளை மின் தடை செய்யப்பட்ட உள்ள பகுதிகள்.

11kv தொந்திலிங்கபுரம் - காலை 9.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை

தர்காகுடி, பூமங்கலபட்டி, வலைச்சேரிபட்டி, மணப்பச்சேரி, நீதிபுரம், வெள்ளாளபட்டி, வெள்ளினிபட்டி, வி.புதுார், காரியேந்தல்பட்டி, தொந்திலிங்கபுரம், சொக்கம் பட்டி, மங்களாம்பட்டி.

11kv கொட்டாம்பட்டி - காலை 9.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை

கொட்டாம்பட்டி, சின்ன கொட்டாம்பட்டி, பாரதிபுரம், பள்ளப்பட்டி, வெள்ளிமலை பட்டி, பொட்டப்பட்டி, நெடுமலை, வெள்ளிமலை, குருவார்பட்டி, சிலம்பக்கோன்பட்டி.

11kv சொக்கலிங்கபுரம் - காலை 9.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை

சொக்கலிங்கபுரம், உதினிப்பட்டி, மணல்மேட் டுப்பட்டி, மலம்பட்டி, ஆலம்பட்டி

அதே போல் காலை 9.00 மணி முதல் மதியம் 03.00 மணி மின்தடை ஏற்படும் பகுதி

கிண்ணிமங்கலம், மாவிலிபட்டி, கருமாத்துார், சாக்கலிப்பட்டி, கோவிலாங்குளம், பூச்சம்பட்டி, ஜோதிமாணிக்கம், வடபழஞ்சி, தென்பழஞ்சி, பல்கலை நகர் ஆகிய பகுதிகளாகும்.