தமிழ்நாட்டில் முக்கியமான பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்வெட்டு ஏற்படும் என தமிழ் நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர்.

தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதனால் மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும். இந்த நிலையில் திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், திருநெல்வேலி மாவட்டத்திற்கு உட்பட்ட பின்வரும் துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி நகர்புற கோட்டம் செயற்பொறியாளர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தச்சநல்லூர் துணைமின் நிலையத்த்தில் நாளை 3.11.2025 திங்கள்கிழமை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பின்வரும் பகுதிகளுக்கு பாதுகாப்பு கருதி மின்விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை : தச்சநல்லூர், நல்மேய்ப்பர்நகர், செல்வவிக்னேஷ்நகர், பாலாஜி அவென்யூ, வடக்கு பாலபாக்கியநகர், தெற்கு பாலபாக்கியநகர், மதுரை ரோடு, திலக்நகர், பாபுஜிநகர், சிவந்திநகர், கோமதிநகர், சிந்துபூந்துறை, மணிமூர்த்தீஸ்வரம் மற்றும் இருதயநகர் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் குத்தாலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தாழையூத்து துணைமின் நிலையத்தில் நாளை 3.11.2025, திங்கள்கிழமை மின்வாரிய மாதாந்திர அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பாதுகாப்பு கருதி பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும். அதன்படி மானூர் வட்டாரம், தாழையூத்து, சேதுராயன்புதூர், ராஜவல்லிபுரம், ரஸ்தா, தச்சநல்லூர், தென்கலம்புதூர், நாஞ்சான்குளம், தென்கலம், மதவகுறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.