திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பின்வரும் துணை மின் நிலையங்களில் நாளை 3ம் தேதி சனிக்கிழமை அன்று மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருநெல்வேலி நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

கொக்கிரகுளம் துணை மின் நிலையத்தில் நாளை சனிக்கிழமை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பாதுகாப்பு கருதி மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்படும். அதன் காரணமாக திருநெல்வேலி சந்திப்பு, கொக்கிரகுளம், மீனாட்சிபுரம், வடக்கு மற்றும் தெற்கு புறவழிச் சாலை, வண்ணாரப்பேட்டை முழுவதும், இளங்கோநகர், பரணிநகர், திருநெல்வேலி சந்திப்பு முதல் மேரி சார்ஜன்ட் பள்ளி வரையிலான திருவனந்தபுரம் சாலை, பாளை புதுப்பேட்டை தெரு, சுப்பிரமணியபுரம் மற்றும் மாருதிநகர் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும் என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மின் தடை குறித்து வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பணகுடி துணை மின் நிலையத்தில் நாளை 3ம் தேதி சனிக்கிழமை அன்று மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திடவுள்ளதால் துணை மின் நிலையத்தில் மின்வினியோகம் தடை செய்யப்படும். எனவே பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் கீழே குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்வினியோகம் இருக்காது என குறிப்பிடப்பட்டுள்ளது. பணகுடி, லெப்பைகுடியிருப்பு, புஷ்பவனம், குமந்தான், காவல்கிணறு, சிவகாமிபுரம், தளவாய்புரம், பாம்பன்குளம், கலந்தபனை, கடம்பன்குளம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோல் கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும்பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கல்லிடைக்குறிச்சி கோட்டம் - ஓ.துலுக்கப்பட்டி, வீரவநல்லூர், அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, கடையம் துணைமின் நிலையங்களில் நாளை 3ம் தேதி சனிக்கிழமையன்று மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்குறிப்பிட்டுள்ள துணைமின் நிலையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்வினியோகம், பாதுகாப்பு கருதி நிறுத்தி வைக்கப்படும்.

அதன்படி ஆழ்வான்துலூக்கப்பட்டி, ஒ.துலூக்கப்பட்டி, செங்குளம், பாப்பாகுடி, கபாலிபாறை, இடைகால், அணைந்தநாடார்பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி, நாலாங்கட்டளை, கீழக்குத்தப்பாஞ்சான், காசிதர்மம், முக்கூடல், சிங்கம்பாறை. கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சாட்டுபத்து, அரிகேசவநல்லூர், வெள்ளாங்குளி, ரெங்கசமுத்திரம், கூனியூர், காருகுறிச்சி.

அம்பாசமுத்திரம், ஊர்க்காடு, வாகைகுளம், இடைகால், மன்னார்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியர்பட்டி, மணிமுத்தாறு, ஜமின்சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி, வைராவிகுளம், பொன்மாநகர், தெற்குபாப்பன்குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூர், ஏர்மாள்புரம்.கடையம், கட்டேரிபட்டி, முதலியார்பட்டி, பண்டாரகுளம், பொட்டல்புதூர், திருமலையப்புரம், ரவணசமுத்திரம், வள்ளியம்மாள்புரம், சிவநாடனுர்,மாதாபுரம், மைலப்பபுரம், வெய்காலிப்பட்டி, மேட்டூர் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.