PM Modi Meeting: மீண்டும் அமலுக்கு வரும் ஊரடங்கு? - பிரதமர் மோடி அவசர ஆலோசனை!

2 weeks ago 4
ARTICLE AD

மேற்காசிய போர் காரணமாக இந்தியாவில் ஏற்படும் அசாதாரண சூழலை கையாளும் பொருட்டு மாநில முதலமைச்சர்களுடம் பிரதமர் மோடி நாளை (மார்ச் 27) ஆலோசனை நடத்துகிறார்.

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தி வருகிறது. ஒரு மாதத்தை இந்த போர் நெருங்கியுள்ள நிலையில், இதனால் உலக நாடுகளில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறது. இதனைக் கையாள மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேசமயம் பெட்ரோல்,டீசல் போன்ற எரிபொருள் தட்டுப்பாடு உருவாகும் என சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசு இந்த தகவலை மறுத்து வருகிறது.

கொரோனா ஊரடங்கு போல விரைவில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நேரலாம் எனவும், இதன் காரணமாக ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என தகவல் பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இப்படியான நிலையில் மேற்கு ஆசிய மோதல் தொடர்ந்து நீடித்தால் ஏற்படும் அசாதாரண சூழலை கையாளும் பொருட்டு தயார் நிலை மற்றும் திட்டங்களை உருவாக்க  பிரதமர் நரேந்திர மோடி நாளை (மார்ச் 27) மாலை காணொளிக் காட்சி மூலம் மாநில முதலமைச்சர்களுடன் கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள மாநில முதலமைச்சர்கள் மட்டும் இதில் கலந்து கொள்ள மாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக தலைமை செயலாளர்கள் பங்கேற்க உள்ளார்கள் என சொல்லப்படுகிறது.

Read Entire Article