தமிழ்நாடு முதலமைச்சர் விஜயுடன் தன்னை ஒப்பிட வேண்டாம் என ஆந்திரப்பிரதேசத்தின் துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அமோக வெற்றி பெற்றது. அக்கட்சி தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்றார். இந்த நிலையில் அந்த சம்பவம் பவன் கல்யாணுக்கு சோகமாக அமைந்துள்ளது. ஆந்திரப்பிரதேச மாநிலம் மங்களக்கிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தன் கட்சி தொண்டர்களிடையே பவன் கல்யாண் பேசினார். அப்போது மக்கள் தனக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளார். பவன் கல்யாணின் சகோதரரான நடிகர் சிரஞ்சீவி, விஜயுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்த நிலையில் பவன் கல்யாணின் கருத்து சமூக வலைத்தளத்தில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

<iframe title="Tvk MLA | "நானும் டாக்டர் தான்இனிமே மாசத்துல ஒருநாள்.."தவெக எம்.எல்.ஏ பேட்டி" src="https://www.youtube.com/embed/8N4BOwMP9ZE" width="805" height="453" frameborder="0" allowfullscreen="allowfullscreen">

பவன் கல்யாண் பேசும்போது, “தமிழ்நாடு தேர்தல் நடந்து அவர் (விஜய் பெயரை குறிப்பிடாமல்) முதலமைச்சரானதிலிருந்து, மக்கள் எனக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். நமது அண்டை மாநிலத்தில், ஒரு நடிகர் கட்சியைத் தொடங்கி முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அதன் பிறகு ஆந்திரப் பிரதேசத்திலும் நான் அதையே செய்திருக்க வேண்டும் என்று பலர் எனக்கு குறுஞ்செய்தி அனுப்பி வருகின்றனர். இதனைப் பார்க்கும்போது பக்கத்து வீட்டுத் திருமணத்திற்கு ஏதோ நம் வீட்டில் நிகழ்ச்சி நடப்பது போல எதுவும் அறியாமல் குழந்தைகள் ஓடித் திரிவதை போல இருக்கிறது.

காரணம் ஆந்திரப் பிரதேசத்தில் அரசியல் நிலைமை வேறாக உள்ளது. நான் 2019 தேர்தலில் போட்டியிட்டேன். அப்போது அமைச்சர்கள் கூட எனக்கு ஆதரவாக நிற்கவில்லை. இந்த அனுபவம்தான், எனது பாதையை விஜய்யின் சமீபத்திய வளர்ச்சியுடன் ஒப்பிட முடியாததாக ஆக்குகிறது எனவும் பவன் கல்யாண் விளக்கமளித்தார்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்த பவன் கல்யாண் 2014ம் ஆண்டு ஜனசேனா கட்சியைத் தொடங்கினார். 2014ம் ஆண்டு தேர்தலில் அவரது கட்சி போட்டியிடாமல் ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் மற்றும் பாஜகவின் கூட்டணிக்கு ஆதரவுன் தெரிவித்தது. இதன்பின்னர் 2019ம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஜனசேனா கட்சியானது பகுஜன் சமாஜ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுடன் இணைந்து களம் கண்டது. ஜன சேனா கட்சி 140 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் ஒரு தொகுதியில் மட்டும் தான் வெல்ல முடிந்தது. பவன் கல்யாண் இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

2024 சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம், பாஜக கூட்டணியில் ஜனசேனாவும் இடம்பெற்றது. இதில் 21 இடங்களில் அவரது கட்சி வெற்றி பெற்றது. கல்யாண் பித்தாபுரம் தொகுதியில் பவன் கல்யாண் ஜெயித்தார். இந்த நிலையில் பவன் கல்யாணுக்கு துணை முதலமைச்சர் பதவி கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.