ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடங்குவதற்கு சில வாரங்களுக்களே உள்ள நிலையில் ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸ் காயம் காரணமாக தொடரில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது ஆஸ்திரேலிய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025:

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அமீரகத்தில் ஹைபிரிட் மாடலில் நடைப்பெற உள்ளது. இதற்கான தங்கள் அணியின் பட்டியலை ஏற்கெனவே அறிவிட்டது, ஒரு வேளை அணியில் மாற்றங்கள் தேவைப்பட்டால் பிப்ரவரி 13 ஆம் தேதிக்குள் மாற்றம் செய்யலாம் என்று கூறியுள்ளது.

பேட் கம்மின்ஸ் விலகல்?

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடங்குவதற்கு சில வாரங்களே உள்ள நிலையில் ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி இருந்து தொடரிலிருந்து விலகலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் புதன்கிழமை செய்தியாளர் சந்திப்பில்ன் குண்டை தூக்கிப் போட்டார், கம்மின்ஸ் இன்னும் எதிர்பார்த்தபடி பந்துவீச்சைத் தொடங்கவில்லை என்பதை மெக்டொனால்ட் உறுதிப்படுத்தினார். எனவே, சாம்பியன்ஸ் டிராபி தொடங்குவதற்கு முன்பு அவர் மீண்டும் உடற்தகுதி பெற வாய்ப்பில்லை என்றும் கம்மின்ஸ் இல்லாத நிலையில், டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரில் ஒருவருக்கு ஆஸ்திரேலியாவை வழிநடத்தும் பொறுப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

ஆஸிக்கு தலைவலி:

டெஸ்ட் கிரிக்கெட் அல்லது ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி சிறப்பாக செயல்பட கம்மின்ஸ் தனது கம்மின்ஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். அவர் இல்லாதது ஆஸ்திரேலியாவுக்கு கேப்டன்சியில் மட்டுமல்ல, வேகப்பந்து வீச்சுத் துறையிலும் பெரும் தலைவலியை ஏற்படுத்துகிறது.

இதையும் படிங்க: Watch video: உள்ளே அனுப்ப முடியாது! இந்திய பயிற்சியாளருக்கு நிகழ்ந்த கொடுமை.. பதிலடி கொடுத்த வாஷிங்டன் சுந்தர்

இது வரை பந்து வீசவில்லை:

"பேட் கம்மின்ஸால் எந்த வகையான பந்துவீச்சையும் மீண்டும் தொடங்க முடியவில்லை, எனவே அவர் மீண்டும் பந்துவீச வாய்ப்பில்லை, எனவே எங்களுக்கு ஒரு கேப்டன் தேவை" என்று ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் S "சாம்பியன்ஸ் டிராபி அணியை உருவாக்கும் போது, பேட் உடன் சேர்ந்து ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோருடன் நாங்கள் தொடர்ந்து உரையாடி வருகிறோம். கேப்டன் பதவிக்கு அவர்கள் இருவரில் ஒருவரை தான் கேப்டனாக போட வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: ICC Champions 2025 : "பாகிஸ்தான் போக மாட்டோம்.. " சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து விலகிய இந்திய போட்டி நடுவர்கள்.. காரணம என்ன?

"அவர்கள் இருவரும் வெளிப்படையானவர்கள். [முதல்] டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். அவர் பயணம்முழுவதும் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டிலும் நல்ல கேப்டன்சியை செய்துள்ளார். எனவே அது அந்த இருவருக்கும் இடையில் உள்ளது."

ஹேசில்வுட் பற்றிய தகவல்:

சாம்பியன்ஸ் டிராபிக்கு ஆஸ்திரேலியா அணியில் ஜோஷ் ஹேசில்வுட் போன்ற மற்றொரு மூத்த வேகப்பந்து வீச்சாளர் இல்லாமல் இருக்க வாய்ப்புள்ளது . ஹேசில்வுட் பற்றிய முழு தகவல் வரவில்லை என்றாலும், அவர் அணியில் இடம்பெறுவது குறித்து ஓரிரு நாட்களில் தெளிவு கிடைக்கும் என்றார்.