பாராலிம்பிக் 2024:

மாற்றுத்திறனாளிகளுக்கான பாரீஸ் பாராலிம்பிக் போட்டி கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த போட்டிகளில் இந்தியா சார்பில் மொத்தம் 84 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் இந்தியா 3 தங்க பதக்கம், 5 வெள்ளி பதக்கம் மற்றும் 7 வெண்கலப்பதக்கங்கள் என மொத்தம் 15 பதக்கங்களை வென்றுள்ளது. அந்தவகையில் இன்று (செப்டம்பர் 3) இந்தியா விளையாட உள்ள போட்டி அட்டவணையை இந்த தொகுப்பில் பார்ப்போம்:

பாராலிம்பிக் போட்டி அட்டவணை:

மதியம் 1 மணி - பாரா துப்பாக்கி சுடுதல் - R8 - பெண்கள் 50 மீட்டர் ரைபிள் 3 நிலைகள் SH1 தகுதி - மோனா அகர்வால், அவனி லெகாரா

மதியம் 2: 28 - பாரா தடகளம் - பெண்கள் ஷாட் புட் - F34 இறுதி - பாக்யஸ்ரீ ஜாதவ்

மதியம் 3: 20 - பாரா வில்வித்தை - பெண்களுக்கான தனிநபர் ரிகர்வ் ஓபன் 1/8 எலிமினேஷன் - பூஜா

இரவு 7 :30 - பாரா துப்பாக்கி சுடுதல் - R8 - பெண்கள் 50 மீட்டர் ரைபிள் 3 நிலைகள் SH1 இறுதி - மோனா அகர்வால், அவனி லெகாரா

இரவு 7 :30 முதல் - பாரா வில்வித்தை - பெண்களுக்கான தனிநபர் ரிகர்வ் ஓபன் காலிறுதி - பூஜா (தகுதிக்கு உட்பட்டது)

இரவு 9 :38 முதல் - பாரா வில்வித்தை - பெண்களுக்கான தனிநபர் ரிகர்வ் ஓபன் அரையிறுதி - பூஜா (தகுதிக்கு உட்பட்டது)

இரவு 10 :27 முதல் - பாரா வில்வித்தை - பெண்களுக்கான தனிநபர் ரிகர்வ் ஓபன் மெடல் போட்டிகள் - பூஜா (தகுதிக்கு உட்பட்டது)

இரவு 10 :38 - பாரா தடகளம் - பெண்கள் 400 மீட்டர் - டி20 இறுதிப் போட்டி - தீப்தி ஜீவன்ஜி

இரவு 11 :50 - பாரா தடகளம் - ஆண்கள் உயரம் தாண்டுதல் - T63 இறுதி - மாரியப்பன் தங்கவேலு, ஷரத் குமார், ஷைலேஷ் குமார்

இரவு 12 - பாரா தடகளம் - ஆண்கள் ஈட்டி எறிதல் - F46 இறுதிப் போட்டி - அஜீத் சிங், ரிங்கு, சுந்தர் சிங் குர்ஜார்

2024 பாராலிம்பிக் தொடரில் இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ள போட்டிகளை எப்படி பார்க்கலாம்?

டிடி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பாராலிம்பிக் போட்டிகளை காணலாம். ஜியோசினிமா இணையதளம் மற்றும் செயலியிலும் போட்டிகளை நேரலையில் ரசிகர்கள் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.