Paris Olympics 2024: ஒலிம்பிக்..வில்வித்தை காலிறுதி; இந்திய அணி முன்னேற்றம்! அசத்திய அங்கிதா பகத், தீபிகா குமாரி

1 year ago 7
ARTICLE AD

பாரீஸ் ஒலிம்பிக் 2024:

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை ஜூலை 26-ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்க உள்ளது பாரீஸ் ஒலிம்பிக் 2024 தொடர். இதில் இந்தியா சார்பில் 117 வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். முன்னதாக பாரிஸ் நகரில் உள்ள லெஸ் இன்வாலிடெஸ் கார்டனில் வில்வித்தை போட்டிக்கான தகுதிச்சுற்று இன்று (ஜூலை 25)  நடைபெற்றது. இதில் இந்திய அணியில் அங்கிதா பகத், பஜன் கவுர் தீபிகா குமாரி ஆகியோர் இடம் பெற்றனர்.

காலிறுதி சுற்றுக்கு முன்னேறிய இந்திய அணி:

12 அணிகள் கலந்துகொண்ட இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி இந்திய அணி 1983 புள்ளிகளைப் பெற்றது. இதனால் 4வது இடத்தை பிடித்த இந்திய அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. தென் கொரியா அணி 2046 புள்ளிகளுடன் முதலிடத்தையும் , சீனா 1996 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும் , மெக்சிகோ 1986 புள்ளிகளுடன் 3வது இடத்தையும் பிடித்து காலிறுதிக்கு தகுதி பெற்றன.  இன்று மாலை ஆடவர் தனிபர் தகுதிச் சுற்று நடைபெறுகிறது.

மகளிர் தனிநபர் பிரிவில் கொரியாவின் லிம் சி-ஹியோன் 694 ஸ்கோருடன் முதல் இடத்தை பிடித்தார். இது உலக சாதனையாக அமைந்துள்ளது. இதற்கு முன்னர் 72 முறை  அம்புகளை எய்தும் தகுதிச் சுற்றில் கொரியாவின் அன் சான் 692 ஸ்கோர் எடுத்தது உலக சாதனையாக இருந்தது. தற்போது அதனை சி-ஹியோன் முறியடித்துள்ளார்.

மேலும் படிக்க: Paris Olympics 2024:அன்று வெள்ளி வென்ற வீராங்கனை.. பாரீஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வாரா? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் மீரா பாய் சானு!

மேலும் படிக்க: Paris Olympics 2024:பாரீஸ் ஒலிம்பிக்..தங்கம் வெல்ல காத்திருக்கும் லோவ்லினா போர்கோஹைன் மற்றும் நிகத் ஜரீன்!

Read Entire Article