தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரிஜாதம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஸ்ரீஜாவை மயங்க வைத்து இசையை மணப்பெண்ணாக முகத்தை மூடி மணமேடைக்கு ஏற்றிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

கல்யாணத்தை நிறுத்த ஸ்ரீஜா சதி:

அதாவது இசை மணமேடையில் இருக்க ராகவ் ஸ்ரீஜாவை சந்திக்கிறான். இனிமே உன்னால ஒன்னும் பண்ண முடியாது இசையை மணமேடை ஏத்தியாச்சு என்று சொல்கிறான்.

இதனால் அதிர்ச்சி அடையும் ஸ்ரீஜா இந்த கல்யாணத்தை நான் நடக்க விடமாட்டேன் என்று சொல்ல, ராகு உன்னால முடிஞ்சத பாத்துக்கோ என்று சொல்கிறான். ஸ்ரீஜா அங்கிருந்து கிளம்பி வருகிறாள்.

தாலி கட்டுவானா விஷால்?

மறுபக்கம் மண்டபத்தில் இசையை காணவில்லை என சுபத்ரா தேடுகிறாள். அதன் பிறகு விஷால் இசை கழுத்தில் தாலி கட்ட போக ஸ்ரீஜா மண்டபத்தை நோக்கி வேக வேகமாக வருகிறாள்.

விஷால் இசை கழுத்தில் தாலி கட்டுவது அங்கு வந்த ஸ்ரீஜா நிறுத்துங்க என்று சத்தம் போட அவளைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய பாரிஜாதம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.