தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரிஜாதம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் இசை மற்றும் விஷால் ஆகிய இருவரும் இணைந்து இரவு முழுவதும் தேடி வர்ஷினியை கண்டுபிடித்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

கடுப்பாகிய விஷால்:

அதாவது வர்ஷினியை ஹாஸ்பிடல் அட்மிட் செய்ய அவளை பரிசோதனை செய்த டாக்டர் பயப்படும்படியாக ஒன்றும் இல்லை என சொல்கிறார். இதனால் இசை, விஷால் ஆகியோர் சந்தோஷப்படுகின்றனர்.

அதன் பிறகு இசையும் விஷாலும் பேசிக்கொண்டிருக்க பிரிய இன்னும் ஒரு வருஷம் டைம் இருக்கு.. அதுக்குள்ள என்ன வேணும்னாலும் மாறலாம் என்று சொல்ல விஷால் கடுப்பாகிறான். பிறகு இசை ஸ்ரீஜாவை சந்தித்து நீ சொன்னா மாதிரி என் தங்கச்சி ஊர்ல பத்திரமா இருக்கா என்று சொல்லி நக்கல் அடிக்கிறாள்.

அட்வைஸ் செய்த அலங்காரம்:

இசை விஷால் ஆகியோர் ஏற்காட்டில் இருந்து சென்னைக்கு கிளம்பும்போது அலங்காரம் விஷாலை சந்தித்து இசை ரொம்ப நல்ல பொண்ணு.. அவளை பத்திரமா பார்த்துக்கோ என்று அறிவுரை வழங்குகிறார்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய பாரிஜாதம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.