தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரிஜாதம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஸ்ரீஜா விஷாலை ரெஜிஸ்டர் மேரேஜ் செய்ய அழைத்து சென்ற நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

விஷால் - ஸ்ரீஜா திருமணம்:

அதாவது, விஷாலும் ஸ்ரீஜாவும் ரெஜிஸ்டர் மேரேஜ் செய்து கொள்ள போவதாக வர்ஷினிக்கு தெரிய வருகிறது, அடுத்து வர்ஷினி மூலமாக இந்த விஷயம் இசைக்கு தெரிய வந்து இசை அதிர்ச்சி அடைகிறாள்.

மறுபக்கம் விஷாலும் ஸ்ரீஜாவும் ரெஜிஸ்டர் ஆபிஸ்க்கு வந்து விடுகின்றனர், விஷால் ஸ்ரீஜா கழுத்தில் தாலி கட்ட செல்ல அங்கு வந்த இசை இந்த கல்யாணத்தை நிறுத்துகிறாள்.

திருமணத்தை நிறுத்திய இசை:

விஷாலை தனியாக அழைத்து சென்று உங்க அம்மா உங்க மேல பெரிய மரியாதை வச்சிருக்காங்க, நான் கண்டிப்பா இந்த கல்யாணத்தை நிறுத்தி உங்களை விட்டு போய்டுவேன். அதனால் ரெஜிஸ்டர் மேரேஜ் வேண்டாம் என்று சொல்கிறாள்.

இசை சொன்னதை கேட்டு விஷாலும் மனம் மாறுகிறான், விஷால் ஸ்ரீஜாவிடம் இப்போதைக்கு இந்த கல்யாணம் வேண்டாம் என்று சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய பாரிஜாதம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.