ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியையும், ராமேசுவரம் தீவையும் இணைக்கும் வகையில் பாம்பன் கடலில் 565 கோடி ரூபாய் மதிப்பில் புதிய ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 6 ஆம் தேதி திறந்து வைக்கிறார். இந்த நிலையில், பாம்பனில் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராமநவமி அன்று பிரதமர் மோடி புதிய பாலத்தை திறந்துவைக்க உள்ளதாகவும், பழைய பாலம் குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.