Palayamkottai constituency: தொடரும் உட்கட்சி மோதல்.! கூட்டணி கட்சிக்கு கைமாறுதா திமுகவின் பாளையங்கோட்டை தொகுதி.?

2 months ago 9
ARTICLE AD

நெருங்கும் தமிழக தேர்தல்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பணிகள் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுக 200 தொகுதிகளை இலக்காக கொண்டு தேர்தல் பணியை கடந்த ஆண்டே தொடங்கிவிட்டது. கிளைக்கழகம் முதல் மாவட்டம் வரை மக்களை சந்தித்து வாக்குகளை கவரும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படாத நிர்வாகிகள் மாற்றப்பட்டும், புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படவும் செய்தனர். மேலும் மாவட்டங்களையும் பிரித்தும் புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதில் திமுகவிற்கு கடந்த தேர்தலில் மிகப்பெரிய அளவில் கை கொடுத்தது தென் மாவட்டங்கள் தான்.

திமுகவில் உட்கட்சி மோதல்

எனவே இந்த முறையும் தென் மாவட்டங்களில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என திமுக தலைமை காய் நகர்த்தி வருகிறது. ஆனால் நெல்லை மாவட்டத்தில தொடரும் உட்கட்சி மோதலால் தவிக்கும் நிலைக்கு திமுக தள்ளப்பட்டுள்ளதாக அக்கட்சியின் நெல்லை மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்து வருகிறார்கள். நெல்லை மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரன் (பாஜக), அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா (அதிமுக), பாளையங்கோட்டை தொகுதியில் அப்துல் வஹாப்.M (திமுக), நாங்குநேரி தொகுதியில் ரூபி ஆர். மனோகரன் (காங்கிரஸ்) ஆகியோர் எம்எல்ஏக்களாக உள்ளனர்.

திமுகவின் கோட்டை பாளையங்கோட்டை

இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் குறிப்பாக தென்னகத்தின் ஆக்ஸ்போர்ட் என்று பெயர் பெற்ற பாளையங்கோட்டை தொகுதி திமுகவின் கோட்டையாக உள்ளது. இந்த தொகுதியில் உள்ள மேலப்பாளையம் பகுதியில் 95 சதவிகிதத்துக்கு மேல் இஸ்லாமியர்கள் வசிக்கிறார்கள். இது போல் நகர்ப்புற பகுதியில் கிறிஸ்தவர்களும் அதிகளவில் உள்ளனர்.கடந்த 9 சட்டமன்ற தேர்தல்களில் திமுக 6 முறையும், அதிமுக 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில் அந்த தொகுதியில் முன்னாள் அமைச்சர்  டி.பி.எம். மைதீன்கான் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இதனையடுத்து 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அப்துல் வஹாப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் தான் நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே பல கோஷ்டி பூசல்கள் உள்ளன. மாநகரம், மாவட்டம், ஒன்றியம், பேரூர் என அனைத்து பிரிவுகளிலும் உள்கட்சி பூசல் காணப்படுகிறது.

மைதீன்கான்- வஹாப் மீது அதிருப்தியா.?

கோஷ்டி பூசல் காரணமாகவே அந்த மாவட்டத்தில்  மத்திய மாவட்ட பொறுப்பாளர் அப்துல் வகாப்பின் பதவியே ஏற்கனவே பறிபோனது. இந்த நிலையில் தற்போது பாளையங்கோட்டை தொகுதியில் தொடரும் உட்கட்சி மோதல் காரணமாக தனி தனி அணியாக திமுக நிர்வாகிகள் பிரிந்துள்ளனர். மேலும் பாளையங்கோட்டை தொகுதி திமுகவின் கோட்டையாக உள்ளது. இங்கு இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள தொகுதியில் மைதீன் கான் மற்றும் அப்துல் வஹாப் ஆகியோர் தங்களுக்கு அடுத்தபடியாக எந்த வித இஸ்லாமிய தலைவர்களையும் உருவாக்கவில்லையென அப்பகுதியை சேந்தவர்களும் குறையாக தெரிவிக்கிறார்கள்.

மேலும் பாளையங்கோட்டை தொகுதியில் அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்திட தற்போது உள்ள எம்எல்ஏ வஹாப் எந்த வித முயற்சியும் எடுக்கவும் இல்லை, கண்டுகொள்ளவில்லையெனவும் கூறப்படுகிறது.

கைமாறுகிறதா பாளையங்கோட்டை

எனவே திமுகவில் டிபிஎம் மைதீன் கான் அல்லது அப்துல் வகாப் ஆகிய இருவரில் யாருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தாலும் கட்சி நிர்வாகிகள் உள்ளடி வேலை பார்ப்பார்க்க வாய்ப்பு இருப்பதாக அப்பகுதி திமுக வட்டாரம் தெரிவித்து வருகிறது. எனவே கூட்டணி கட்சிகளுக்கு பாளையங்கோட்டை தொகுதியை ஒதுக்கிவிடலாமா என திமுக தலைமை யோசித்து வருவதாக கூறப்படுகிறது  ஆளுங்கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட், மக்கள் நீதி மையம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளது. இது மட்டும் இல்லாமல் திமுக கூட்டணியில் இஸ்லாமிய கட்சிகளான மனிதநேய மக்கள் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஏற்கனவே இடம்பெற்றுள்ளது.

போட்டி போடும் கூட்டணி கட்சிகள்

தற்போது மேலும் இரண்டு புதிய கட்சிகளானது இணைய உள்ளது. எஸ்டிபிஐ கட்சியும், தமிமுன் அன்சாரி தலைமையான மனித நேய ஜனநாயக கட்சியும் திமுக கூட்டணியில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது இதற்கு ஏற்ப கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. எனவே இஸ்லாமிய கட்சிகளும் பாளையங்கோட்டை தொகுதியை குறிவைத்து திமுக தலைமையிடம் கோரிக்கை விடுத்து வருகிறது. எனவே சிறுபான்மையினரின் ஓட்டுக்களை கவரும் வகையில் பாளையங்கோட்டை தொகுதியை கூட்டணியில் உள்ள இஸ்லாமிய கட்சிகளுக்கு ஒதுக்கிவிடலாமா என திமுக தலைமை ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read Entire Article