Palani: கூட்டுறவு சேமிப்பு கிடங்கில் உணவுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு! முக்கிய உத்தரவு

1 year ago 7
ARTICLE AD

பழனி கூட்டுறவு சேமிப்பு கிடங்கில் உணவுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு, நியாய விலைக் கடைகளின் தேவைக்கு ஏற்ப பொருள்களை அனுப்ப வேண்டும் - மழை காலம் தொடங்கி விட்டதால் நியாய விலை கடைகளில் பொருட்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க அதிகாரிகளுக்கு உத்தரவு.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் உணவுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு செய்தார். கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள அரிசி, பருப்பு உள்ளிட்ட அவற்றின் தரத்தை ஆய்வு செய்தார். மேலும் பாமாயில் , சர்க்கரை உள்ளிட்ட பொருள்களின் இருப்பு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து நியாய விலை கடைகளுக்கு தேவைக்கேற்ப பொருட்கள் அனுப்பி வைக்கப்பட வேண்டும் மழைக்காலம் துவங்கி விட்டதால் நியாய விலை கடைகளில் தட்டுப்பாடு இன்றி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

TVK Vijay: த.வெ.க மாநாட்டிற்கு இடம் பற்றாக்குறை... திணறும் கழக நிர்வாகிகள்... ஸ்தம்பிக்குமா தேசிய நெடுஞ்சாலை?

மேலும் நியாய விலைக் கடைகளில் பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் கூட்டுறவு அங்காடிகள் மூலம் 37 ஆயிரம் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அந்த நியாய விலை கடைகளுக்கு அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சேர்ப்பதை அதிகாரிகள் செய்து வருகின்றனர். தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்கள் எந்த நியாய விலை கடையில்  வேண்டுமானாலும் பொருட்களைப் பெற்றுக் செல்லும் முறை நடைமுறையில் உள்ளது. அதற்கு ஏற்ப நியாய விலைக் கடைகளில் பொருட்கள் இருப்பு வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும்,

Uttarkhand: சிறையில் ராமாயண நாடகம் - குரங்கு வேடமிட்ட கைதிகள் - சுவர் ஏறி குதித்து தப்பி ஓட்டம்

ஒரு சில நியாய விலை கடைகளில் வெளி மாவட்டத்தில் இருந்து வந்த நபர்கள் பொருட்களை வாங்க செல்லும்போது தடங்கல் உள்ளதாகவும் அவற்றை நிறைவர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார் . மேலும் தற்போது மழை காலம் தொடங்கிவிட்ட நிலையில் தாழ்வான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள கடைகளில் உள்ள பொருட்களை பாதுகாப்பான இடத்தில் வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இனிமேல் பிரஸ் ஷோ கிடையாது...பாலிவுட் தயாரிப்பு நிருவனம் எடுத்த அதிரடி முடிவு..கோலிவுட் நிலை என்ன?

வெள்ளம் மற்றும் கனமழை பெய்துள்ள இடங்களில் பொதுமக்களுக்கு பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகள் புனரமைப்பு பணி நடைபெற்று வருகிறது 37 ஆயிரம் கடைகளில் 6000 கடைகள் புதிதாக கட்டிடங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மேலும் அதனை அதிகப்படுத்தி ஆண்டுக்கு பத்தாயிரம் கடைகள் கட்டிக் கொடுக்க இலக்கு நிர்ணயித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Read Entire Article