Palani Murugan Temple: ஆபத்து நேரத்தில் சிக்கிய பக்தர்களை மீட்பது எப்படி? - பழனி கோயிலில் பேரிடர் மீட்பு குழு ஒத்திகை

1 year ago 6
ARTICLE AD

பழனி கோயில் ரோப்காரில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. ரோப்காரில் அந்தரத்தில் பழுதாகி நிற்கும் போது பக்தர்களை மீட்பது எப்படி என்பது குறித்து ஒத்திகையை பேரிடர் மீட்பு குழுவினர் செய்து காண்பித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். அறுபடை வீடுகளில் ஒரு வீடு பழனி முருகன் கோயிலாகும். இங்கு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு வருகை தருவார்கள். பங்குனி உத்திரம், ஆடி கிருத்திகை, சஷ்டி, சூரசம்ஹாரம் ஆகிய விஷேச நாட்களின் பக்தர்கள் அலைகடலாய் திரண்டு வருவார்கள். இங்கு பக்தர்கள் எந்த சிரமமுமின்றி சுவாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பழனி மலை தண்டாயுதபாணி கோயிலுக்கு செல்ல படிப்பாதை, யானை பாதை, விஞ்ச், ரோப் கார் ஆகிய வசதிகள் உள்ளது.

படிப்பாதை அல்லது யானை பாதை பயன்படுத்த முடியாத பக்தர்கள் விஞ்ச் அல்லது ரோப் கார் மூலம் கோயிலுக்கு செல்வார்கள். விஞ்ச் பயன்படுத்தி சென்றால் 7 நிமிடத்தில் கோயிலுக்கு சென்றடைய முடியும். அதே சமயம் ரோப் கார் மூலம் 3 நிமிடத்தில் கோயிலுக்கு செல்ல முடியும். விஞ்ச் சேவை விட ரோப் கார் சேவை வேகமாக செல்லும் என்ற காரணத்தால் பெரும்பாலான மக்கள் ரோப் காருக்கு அதிக முன்னுரிமை கொடுப்பார்கள்.

Trai Mobile Number: ரைட்ரா, இனி ரீசார்ஜ் மட்டும் போதாதாம்..! மொபைல் நம்பருக்கும் கட்டணம்? - TRAI புதிய விதி சொல்வது என்ன?

பல இடங்களில் ரோப் கார் சேவை இருந்து வருகிறது. ஒரு சில இடங்களில் ரோப் கார் கேபிள் முறிந்து விழுந்த சம்பவங்கள் நடைபெற்றதும் உண்டு. அப்படி அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க மாதம் ஒரு முறையும், ஆண்டுக்கு ஒரு மாதமும் பராமாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். அப்படி பராமரிப்பு பணிகள் நடைபெறும் வேலையில் இந்த சேவை ரத்து செய்யப்படும். இந்த பணிகள் அவ்வப்போது தொடர்ந்து நடைபெற்று வரும்.

BREAKING Kuwait Fire Accident: குவைத் தீ விபத்து : சிறப்பு விமானத்தில் கொச்சி வந்தடைந்த 45 இந்தியர்களின் உடல்கள்.. ஏற்பாடுகள் தீவிரம்

இந்த நிலையில் ரோப் காரில் பக்தர்கள் செல்லும்போது பழுதாகி நின்றால் அந்தரத்தில் பெட்டியில் உள்ள பக்தர்களை மீட்பது எப்படி என்பது குறித்து தேசிய பேரிடர் மீட்பு குழு வீரர்கள் ஒத்திகை நிகழ்ச்சியை செய்து காண்பித்தனர்.

200 அடி உயரத்தில் தொங்கிக் கொண்டிருந்த பெட்டியில் இரண்டு வீரர்கள் மாட்டிக்கொண்ட நிலையில் கயிறு கட்டி மேலே செல்லும் வீரர் பத்திரமாக மீட்டு வருவது எப்படி என்பதை செயல்முறையாக செய்து காண்பித்தனர்.

Tamil Pudhalvan Scheme: போடு வெடிய: மாணவர்களுக்கும் ஆகஸ்ட் முதல் மாதாமாதம் ரூ.1000: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு- விவரம்

நிகழ்ச்சியில் கோயில் ஊழியர்கள், ரோப் கார் பணியாளர்கள், தீயணைப்பு படை வீரர்கள் பலரும் கலந்து கொண்டனர். ரோப்காரில் பயணம் செய்யும் பக்தர்களின் பாதுகாப்பு கருத்தில் கொண்டு இது போன்ற ஒத்திகை  நிகழ்ச்சியை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் செய்து காண்பித்தனர்.

Read Entire Article