Pakistan Earthquake: பாகிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்!

8 months ago 6
ARTICLE AD

பாகிஸ்தான் நாட்டில் இன்று மாலை 4.40 மணி அளவில் சுமார் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம்  உருவாகியிருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இது ரிக்டர் அளவுகோலில் 4.7 என பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

EQ of M: 4.7, On: 31/03/2025 16:40:33 IST, Lat: 25.64 N, Long: 67.11 E, Depth: 10 Km, Location: Pakistan.
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjcVGs @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/pzsUMe5VFz
— National Center for Seismology (@NCS_Earthquake) March 31, 2025

மியான்மர் நிலநடுக்கம்:

சில தினங்களுக்கு மியான்மரில் அடுத்தடுத்து சில மணி நேரங்களில் 6க்கும் ஏற்பட்ட நிலநடுக்கமானது ஏற்பட்டது. சில நேரத்தில்  ரிக்டர் அளவுகோலில் 7.7 என மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. இதனால், அந்த நிலநடுக்கத்தின் தாக்கமானது அதன் அண்டை நாடுகளான தாய்லாந்து, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளிலும் உணரப்பட்டது. குறிப்பாக,  தாய்லாந்தில் அதன் பாதிப்பும் தீவிரமாக இருப்பதாக தகவல் இருக்கின்றன.

இந்நிலையில், தற்போது மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,000ஐத் தாண்டியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இடிபாடுகளில் சிக்கிய கட்டிடங்களில் மேலும் பலரைக் கண்டுபிடிப்பதில் சிரமம் நீடிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தருணத்தில் ஒரு வார தேசிய துக்கத்தை மியான்மர் அரசு அறிவித்திருக்கிறது.

2000ஐ தாண்டிய உயிரிழப்பு:

வெள்ளிக்கிழமை ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் ஏற்பட்ட "உயிர் இழப்பு மற்றும் சேதங்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக" ஏப்ரல் 6 ஆம் தேதி வரை தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கும் என்று ஆளும் இராணுவ ஆட்சிக்குழு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட நாளில் இருந்து தொடர்ந்து மூன்றாவது இரவும் மண்டலே முழுவதும் மக்கள் தெருக்களிலேயே தஞ்சமடைந்திருக்கின்றனர். கட்டடங்கள் இடிந்து விழும் என்ற அச்சத்தில் சிறு குழந்தைகள் உட்பட பலர், கட்டிடங்களிலிருந்து விலகி சாலைகளின் நடுவில் போர்வைகளில் படுத்துக் கொண்டிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. திங்கட்கிழமை இறப்பு எண்ணிக்கை 2,056 ஆக உயர்ந்துள்ளதாகவும், 3,900 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், 270 பேரை இன்னும் காணவில்லை என்றும் இராணுவ ஆட்சிக்குழு தெரிவித்துள்ளது.

தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கத்தின் சக்தியால் கட்டுமானத்தில் இருந்த 30 மாடி கோபுரம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 19 பேர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், மியான்மரின் பெரும்பகுதியில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால், பேரழிவின் உண்மையான அளவு இன்னும் வெளிவரவில்லை, மேலும் இறப்பு எண்ணிக்கை கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என சர்வதேச செய்திகள் தகவல் தெரிவிக்கின்றன.

சாலைகளில் தஞ்சம் புகுந்த மக்கள்:

மண்டலேயின் 1,000 படுக்கைகள் கொண்ட பொது மருத்துவமனையில், நூற்றுக்கணக்கான நோயாளிகள் வெளியே சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனை வாகன நிறுத்துமிடத்தில் நோயாளிகள் படுக்கை விரிப்புகளில் படுத்துக் கிடந்தனர், அவர்களில் பலர் கடுமையான  வெயிலிலிருந்து பாதுகாக்க ஒரு மெல்லிய தார்ப்பாய் மட்டுமே கட்டப்பட்டிருந்ததாக தகவல் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், மியான்மர் மற்று தாய்லாந்தில் மிக கடுமையான பாதிப்பு காரணமாக, மக்கள் மிகுந்த அச்சத்திலும், கவலையிலும் இருக்கின்றன. இந்த தருணத்தில் இந்தியா அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகள் தேவையான உதவிகளை செய்ய முன்வந்திருக்கிறது. இந்த தருணத்தில், பாகிஸ்தானில் 4.7 என்ற ரிக்டர் அளவு மிதமான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக இந்திய தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.  இந்நிலையில், அங்கு பெரிய பாதிப்பு இல்லையென்றாலும், அங்கு இருக்கும் மக்களுக்கு, சற்று பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Read Entire Article