<p>''பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு, கற்பனைக்கு அப்பாற்பட்ட வகையில் பதிலடி கொடுப்போம். தீவிரவாதிகளையும் அவர்களுக்குத் துணை நிற்பவர்களையும் கண்டுபிடித்து வேட்டையாடுவோம்'' என்று பிரதமர் மோடி ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.</p>
<p>''இந்தியாவின் ஆன்மாவைத் தாக்கி உள்ளனர். தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேசம் துணை நிற்கும்'' என்றும் அவர் தெரிவித்துள்ளார். பிஹார், மதுபானியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிரதமர், இவ்வாறு தெரிவித்துள்ளார். </p>