Operation Sindoor Movie: ஆபரேஷன் சிந்தூர் படம்.. இயக்கப்போகும் பிரபல இயக்குநர்.. யார் தெரியுமா?
1 month ago 6
ARTICLE AD
இந்தியா பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நடத்திய ராணுவ தாக்குதல் சம்பவத்தை மையமாக வைத்து படம் ஒன்று உருவாக உள்ளது. இப்படத்தை இயக்கப்போவது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பஹல்காம் அட்டாக்- ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்
கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சுற்றுலாத்தலமான பஹல்காமில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மே 7ம் தேதி இந்திய ராணுவம் பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு மிகப்பெரிய அளவில் பதிலடி கொடுக்கப்பட்டது. இந்த தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டது.
ஆபரேஷன் சிந்தூர் படம்
பாலிவுட் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி பல உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு படங்களை எடுத்து வருகிறார். அந்த வகையில் அவர் இயக்கிய 'தி தாஷ்கண்ட் ஃபைல்ஸ்', 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்', 'தி வாக்சின் வார்' , ‘தி பெங்கால் பைல்ஸ்’ ஆகிய படங்கள் கடும் சர்ச்சைகளை கிளப்பிய நிலையில் வசூலை வாரி குவித்தன. இந்த நிலையில் விவேக் அக்னிஹோத்ரி அடுத்ததாக இயக்கப்போகும் படம் பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
#sunnydeol has reportedly joined Operation Sindoor 🇮🇳🔥
As per sources, the film will be directed by Vivek Agnihotri (The Bengal Files fame) and produced by T-Series. The movie is said to be based on a real-life surgical strike operation, with Sunny Deol playing the main lead… pic.twitter.com/SNFxmXq4r9
— Ravi Chaudhary (@BURN4DESIRE1) February 19, 2026
சமீபத்திய ஆண்டுகளில், 'உரி: தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்' மற்றும் 'ஷெர்ஷா' போன்ற இராணுவ நடவடிக்கைகளை அடிப்படையாக கொண்டு வெளியான படங்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களால் வரவேற்கப்பட்டன. அதேபோல் ராணுவ வீரர்களின் வலிமை மற்றும் தியாகத்தை சொல்லும் எந்த மொழி படங்களும் இதுவரை வெற்றி பெற்றிருக்கிறது. அந்த வகையில் நிச்சயம் ஆபரேஷன் சிந்தூர் படமும் மக்களை கவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை ஆபரேஷன் சிந்தூர் படம் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் விவேக் அக்னிஹோத்ரி தனது அடுத்தப்படத்திற்காக டி சீரிஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான பூஷன் குமாருடன் இணைந்துள்ளார் என சினிமா வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளது. 'தி வாக்சின் வார்' , ‘தி பெங்கால் பைல்ஸ்’ என கடைசியாக விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய 2 படங்களில் வசூலை குவித்தாலும் பெரிய வெற்றியைப் பெறவில்லை. அதனால் கம்பேக் கொடுக்கும் வகையில் இந்த ஆபரேஷன் சிந்தூரை அவர் கையில் எடுத்துள்ளார் என சொல்லப்படுகிறது.
Read Entire Article