ஊட்டி மலை ரயில் இயக்கப்பட்டு இன்றோடு 125 ஆண்டுகள் ஆனதையொட்டி குன்னூர் ரயில் நிலையத்தில் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட மலை ரயிலுக்கு குன்னூர் ரயில் நிலையித்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, ஊட்டி மலை ரயில் பாதுகாப்பு இயக்கம் மற்றும் கோவை முதன்மை இரயில்வே அதிகாரி அனுராத் தாகூர் சேர்ந்து கேக்கை வெட்டி, பயணம் செய்த சுற்றுலாப் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஊட்டி மலை ரயில் சேவை மேட்டுப்பாளையத்தில் இருந்து 1899 ஆம் ஆண்டு ஜூன் 15ல் குன்னூருக்கு துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.