Online Automated Patta Transfer : இனி பட்டா மாறுதல்களுக்கு தினமும் அலைய வேண்டாம்.! புதிய நடைமுறை அமல்- என்ன தெரியுமா.?

3 months ago 8
ARTICLE AD

பட்டா மாறுதல் சேவை

பட்டா மாறுதல் செய்வதற்காக தினந்தோறும் சார்பதிவாளர், வட்டாச்சியர் அலுவலகத்திற்கு ஏறி இறங்கும் நிலையானது நீடித்து வருகிறது. அதிலும் பல இடங்களில் பணம் கொடுத்தால் மட்டுமே சேவை கிடைக்கும் நிலையும் உள்ளது. இதனால் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில்,  இணையவழி உட்பிரிவல்லாத தானியங்கி பட்டா மாறுதல் சேவை எளிமைப்படுத்தப்படுத்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்  கே.ஏ. செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

வருவாய்த் துறையைப் பொறுத்தவரையில், நில உரிமையாளரின் சொத்தை உறுதிப்படுத்தும் ஆவணமாக கருதப்படும் பட்டாவினை விரைந்து வழங்கும் வகையில், உட்பிரிவு இல்லாத சொத்து பத்திரப் பதிவு அலுவலகத்தில் முடிவுற்றதும், விற்பனை செய்பவரின் பெயர். புல எண் மற்றும் பரப்பளவு ஆகியவை இணையதள பட்டாவில் உள்ள பெயர் மற்றும் இதர விவரங்களோடு ஒன்றாக இருந்து, வில்லங்கங்கள் ஏதும் அந்தச் சொத்தின்மீது இல்லாதிருப்பின் அதனை வாங்குபவரின் பெயருக்கு தானியங்கி முறையில் இணையதள வழியில் பட்டா மாறுதல் (Auto-mutation) செய்து தரப்படுகிறது.

தானியங்கி பட்டா மாறுதல் சேவையில் திருத்தம்

தற்போது அமுல்படுத்தப்பட்டு வரும் இந்த நடைமுறையில் சில இடர்ப்பாடுகள் உள்ளதை அறிந்து இவற்றை உடனடியாக களைந்து, உட்பிரிவு இல்லாத சொத்தை வாங்கியவரின் பெயருக்கு தானியங்கி பட்டா மாறுதல் சேவை அளிக்க  முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்கள். இது தொடர்பாக நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், சில திருத்தங்களை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதன்படி, தானியங்கி பட்டா மாறுதல் மென்பொருளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

பழைய- புதிய நடைமுறையில் செய்யப்பட்ட மாற்றங்கள் என்ன.?

முந்தைய தானியங்கி பட்டா மாறுதல் மென்பொருளில் உள்ள இடர்பாடுகளான நிலத்தினை விற்பனை செய்யும் போது. விற்பனையாளரின் மனைவி மற்றும் மகன் /மகள் போன்ற குடும்ப உறுப்பினர்களும் (Co-Sign) கையொப்பமிடும் பயன்படுத்த இயலாத நிலை உள்ளது.

தற்போது தானியங்கி பட்டா மாறுதல் மென்பொருளில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் மூலம் நிலத்தினை விற்பனை செய்யும் போது. நில உரிமையாளர் (பட்டாதாரர்) மற்றும் அவரது மனைவி மற்றும் மகன் /மகள் போன்ற குடும்ப உறுப்பினர்கள் கையொப்பமிடும் (Co-Sign) நிகழ்வுகளிலும் இச்சேவையினை பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழை முறையில், நிலத்தினை விற்பனை செய்யும் நபர் பொது (Power அதிகார பத்திர of Attorney) முகவர் மூலம் பத்திரப்பதிவு செய்யும் போது நிலத்தினை விற்பனை செய்பவரின் பெயரானது பட்டாதாரரின் பெயருடன் பொருந்தாமல் இருப்பதனால் இச்சேவையினை பயன்படுத்த இயலவில்லை.

ஒரு பட்டாதாரர் நிலத்தினை பொது அதிகார முகவர் (Power of Attorney) மூலமாக பத்திரப்பதிவு செய்யும் போது, நிலத்தினை விற்பனை செய்பவரின் பெயருக்கும். பட்டாதாரரின் பெயருக்கும் பொருத்தம் இல்லாமல் இருந்தாலும், செல்லத்தக்க பொது அதிகார முகவர் (valid Power of Attorney) என்பதன் அடிப்படையில் தற்போது இச்சேவையினை பயன்படுத்த வழிவகை செய்யப்படும்.

பழைய முறையில் நிலத்தினை வாங்குபவருக்கு அதே வருவாய் கிராமத்தில் ஏதேனும் நிலம் உள்ளதா என்பதனை கண்டறிந்து, புதியதாக வாங்கிய நிலத்தின் புல எண் அந்த பழைய பட்டாவில் சார்பதிவாளர் அவர்களால் சேர்க்கப்படும்.

நிலத்தை வாங்கும் நபருக்கு அதே வருவாய் கிராமத்தில் ஏதேனும் நிலம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவருக்கு தானாகவே கடைசி பட்டா எண்ணிற்கு அடுத்த பட்டா எண் ஒதுக்க வழிவகை செய்யப்படும். இதன் மூலம் காலவிரயம் குறையும்.

பட்டா மாறுதல்களுக்கு அலைய வேண்டாம்

இந்த அரசால் வெளியிடப்பட்டுள்ள அரசாணையின்படி, தானியங்கி பட்டா மாறுதல் மென்பொருளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, 15 நாட்களுக்குள் நடைமுறைப்படுத்தப்படும். இதன் மூலம், சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படும் உட்பிரிவு அல்லாத இனங்களில் தானியங்கி முறையில் (Auto-mutation) பெருவாரியான பட்டாக்கள் மாறுதல் செய்யப்படும். இதனால் பொதுமக்கள் நிலத்தினை பதிவு செய்த பிறகு பட்டா மாறுதல் தொடர்பாக சார்பதிவாளர் அலுவலகத்திற்கோ, வட்டாட்சியர் அலுவலகத்திற்கோ நேரில் செல்லும் நிலை தவிர்க்கப்படுகிறது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Read Entire Article