Mahindra Thar EMI Breakdown: மஹிந்த்ராவின் தார் கார் மாடலானது, எந்தவொரு மோசமான சாலையிலும் எளிதாக பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஆஃப் ரோட் கிங்..!

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் செடான் மற்றும் ஹேட்ச்பேக்குகளை தாண்டி, எஸ்யுவி கார் மாடல்களை நோக்கி பெரும் கூட்டமே திரள்கிறது. அதேநேரம், கரடுமுரடான பயனங்களுக்கான பிரத்யேக கார்களை வாங்குவதற்கு எனவும் ஒரு தனிப்பெருங்கூட்டம் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த வகையில் உள்ளூரில் ஆஃப் - ரோட் கார் பிரிவு என்றாலே அனைவரது நினைவிற்கு முதலில் வருவது மஹிந்த்ராவின் தார் மாடலாக தான் இருக்கும். அதன் கட்டுமஸ்தான வடிவமைப்பு, சாலையில் கம்பீரமான தோற்றம், அபரிவிதமான செயல்திறன். எந்தவொரு சாலையிலும் பயணிக்கக் கூடிய வகையிலான கட்டமைப்பு ஆகியவை வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்க்கிறது. இந்த காரை வாங்க ஆசை இருந்தும் போதுமான நிதி இல்லை என வருந்துகிறீர்களா? உங்களுக்கான எளிதான நிதி திட்டன் விவரம் கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த்ரா தார் எஸ்யுவி - விலை வரம்பு

மஹிந்த்ரா தார் கார் மாடலானது பெட்ரோல் மற்றும் டீசல் பவர்ட்ரெயின்களில், மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. மொத்தம் 7 ட்ரிம்களில் கிடைக்கும் இந்த காரின் விலையானது ரூ.9.99 லட்சத்தில் தொடங்கி ரூ.17.62 லட்சம் வரை நீள்கிறது. மைலேஜிற்கு முக்கியத்துவம் தருபவர்கள், எண்ட்ரி லெவல் விலை வரம்பிலேயே கிடைக்கும் டீசல் எடிஷனை தேர்வு செய்யலாம். அதன்படி, தார் AXT ட்ரிம்மின் ஆன் - ரோட் விலை சென்னையில் ரூ.11.90 லட்சமாக உள்ளது. இதில் ரூ.9.99 லட்சம் எக்ஸ் - ஷோரூ விலை, பதிவுக்கட்டணம் ரூ.1.39 லட்சம் மற்றும் காப்பீட்டு கட்டணம் ரூ.50 ஆயிரம் ஆகியவை அடங்கும்.

மஹிந்த்ரா தார் எஸ்யுவி - ரூ.7,900 போதும்

ஒரு வேளை தார் காரை வாங்க விருப்பம் இருந்தும், நெக்ஸான் காரை வாங்கும் அளவிற்கு தான் கையிருப்பு உள்ளதா? கவலை வேண்டாம் வங்கிகள் தற்போது உங்களது சிபில் ஸ்கோர் அடிப்படையில் 7.45 என்ற வட்டி சதவிகிதம் முதலே வாகன கடன்களை வழங்க தொடங்கியுள்ளன. அந்த வகையில் சுமார் 8 லட்சத்தை முன்பணமாக செலுத்தினால், மீதமுள்ள சுமார் ரூ.3.90 லட்சத்தை வங்கி மூலம் செலுத்திவிட்டு, தவணை முறையில் கடனை அடைக்கலாம். 5 ஆண்டுகளில் திருப்பி செலுத்த 8 சதவிகித வட்டியில் கடன் கிடைத்தால், மாதம் நீங்கள் சுமார் ரூ.7,900 தவணையாக செலுத்த வேண்டி இருக்கும். அதாவது 5 ஆண்டுகள் முடிவில் அசலுடன் சேர்ந்து வட்டியாக சுமார் 84 ஆயிரம் ரூபாயை செலுத்தி இருப்பீர்கள். ஒட்டுமொத்தமாக ரூ.12.74 லட்சத்தில் தார் காரை சொந்தமாக்கி இருப்பீர்கள்.

இதையும் படியுங்கள்: Kia Seltos: செல்டோஸ் கார்தான்னு முடிவு பண்ணிட்டிங்களா? அப்ப எந்த வேரியண்ட் பெஸ்ட்? ஏன்? பட்ஜெட் எப்படி?

மஹிந்த்ரா தார் எஸ்யுவி - 15KM மைலேஜ்

மஹிந்த்ரா தார் கார் மாடலானது 1.5 லிட்டர் டீசல் இன்ஜினை 6 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் வசதியுடன் கொண்டுள்ளது. 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் ஆனது 6 ஸ்பீட் மேனுவல் & 6 ஸ்பீட் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ட்ரான்ஸ்மிஷன்களுடனும் மற்றும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினானது 6 ஸ்பீட் மேனுவல் & 6 ஸ்பீட் டார்க் கன்வெர்டர் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களையும் கொண்டுள்ளது. டீசல் எடிஷன்கள் சுமார் 13 முதல் 15 கிலோ மீட்டர் வரையிலும், பெட்ரோல் எடிஷன் சுமார் 11 முதல் 12 கிலோ மீட்டர் வரையிலும் அதிகபட்சமாக மைலேஜ் வழங்குவதாக கூறப்படுகிறது.

மஹிந்த்ரா தார் எஸ்யுவி - 4 ஸ்டார் ரேட்டிங்

தார் காரின் 5 டோர் எடிஷன் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்று இருந்தாலும், 3 டோர் எடிஷனானது 4 ஸ்டார் ரேட்டிங்கை மட்டுமே பெற்றுள்ளது. விபத்தில் இருந்து பயணிகளை பாதுகாப்பதற்காக சர்வதேச தரத்தில் வலுவான உலோகக் கலவையில் வாகனத்தின் பாடி கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே மைலேஜ் வெகுவாக குறைகிறது. முன்புறத்தில் இரண்டு ஏர் பேக்குகள் உள்ளன. அனைத்து இருக்கைக்ளிலும் 3 பாயிண்ட் சீட் பெல்ட், குழந்தைகளுக்கான ஐடோஃபிக்ஸ் இருக்கைகள், எலெக்ட்ரானிக் ப்ரேக்ஃபோர்ஸ் டிஸ்ட்ரிப்யூஷன் உடன் கூடிய ஆண்டி லாக் ப்ரேக்கிங் சிஸ்டம், ரோல் ஓவர் மிடிகேஷன், ஹில் ஹோல்ட் கன்ட்ரோல், ஹில் டிசெண்ட் கன்ட்ரோல், ரியர் பார்கிங் சென்சார்கள், ரியர்வியூ கேமரா மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

மஹிந்த்ரா தார் எஸ்யுவி - அம்சங்கள், வசதிகள்

தார் கொண்டிருக்கும் 226 மில்லி மீட்டர் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் அதன் அபரிவிதமான ஆஃப்-ரோட் செயல்திறனுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. வசதியான பயணத்திற்காக ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்ட் ஆட்டோ மற்றும் அட்வென்சர் ஸ்டேட்ஸ் ஆஃப் ரோட் சூட் ஆகியவற்றை உள்ளடக்கிய 10.25 இன்ச் எச்டி டச்ஸ்க்ரீன், ரியர் ஏசி வெண்ட்கள், க்ரூஸ் கண்ட்ரோல், ஸ்டியரிங் மவுண்டர் கண்ட்ரோல்கள், எலெக்ட்ரிகலி அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓஆர்விஎம்கள், டோரில் பொருத்தப்பட்ட பவர் விண்டோ கண்ட்ரோல்ஸ், முன்புற ஸ்போர்ட்ஸ் இருக்கைகள் என வசதிகளுக்கு பஞ்சமின்றி கட்டமைக்கப்பட்டுள்ளன்.