<p>234 தொகுதிகளிலும் தனித்துக் களம் காணும் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டுள்ளார். சென்னை, கிண்டியில் இந்தத் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.</p>
<p>இதன்படி ’’நாதக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு 5 தலைநகரங்கள் அமைக்கப்படும், திருச்சி நிர்வாகத் தலைநகராகவும் கோவை வணிகத் தலைநகராகவும் இருக்கும்.</p>
<p>சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு முற்றிலும் ஒழிக்கப்பட்டு, தமிழ் குடிமக்களுக்கு இட ஒதுக்கீடு அறிமுகம் செய்யப்படும். தமிழ்நாட்டுக்கு உள்ளே ரயில்வே நிர்வாகம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும்’’ என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் இதில் அளிக்கப்பட்டு உள்ளன. </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/food/how-to-make-cauliflower-pickle-253633" width="631" height="381" scrolling="no"></iframe></p>